Just In
- 16 min ago
காதலருடன் நிச்சயதார்த்தம் முடித்த பிரபல சீரியல் நடிகை.. இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்து!
- 41 min ago
கொல மாஸ் டான்ஸ்.. வெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ.. டிரெண்டாகும் #VaathiComing
- 50 min ago
லயோலாவில் களைக்கட்டிய ஒயிலாட்டம்.. சாட்டைக்குச்சி ஆட்டம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
- 1 hr ago
பாலா ஏன் பின்னாடி நிக்கிறாரு? டிடியுடன் ஆரி முதல் ஷிவானி வரை.. களைகட்டிய பிக் பாஸ் கொண்டாட்டம்!
Don't Miss!
- News
18 பிஞ்சுகளையும் நாசம் செய்த "டைரக்டர்".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..!
- Sports
ஒரே நேரத்தில்.. வேறு வேறு நாட்டில் 2 சீரிஸ்களில் ஆடும் ஆஸ்திரேலிய அணி.. எப்படி சாத்தியம்? பின்னணி
- Lifestyle
ஆண்களுக்கு பெண்கள் மீது வெறுப்பு வர உண்மையான காரணம் இதுதானாம்... பெண்களே பாத்து நடந்துக்கோங்க...!
- Automobiles
ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்!! கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன
- Finance
4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒரு படத்துக்கு ரூ 30 கோடி.... இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநரானார் பிரபு தேவா!
மும்பை: இந்தியாவின் மிக அதிக சம்பளம் பெறும் நட்சத்திர இயக்குநராக உருவெடுத்துள்ளார் பிரபு தேவா.
இன்றைய தேதிக்கு இந்திப் படம் ஒன்றிற்கு அவர் பெறும் சம்பளம் ரூ 30 கோடி.
ஒரு நடன இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமான பிரபு தேவா, பின்னர் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இரண்டு படங்களில் நடனமாடிய பிறகு, நேரடியாக இந்து படத்தில் ஹீரோவானார். அடுத்து ஷங்கரின் காதலன் படம். அந்தப் படத்தின் மெகா வெற்றி, பிரபு தேவாவை முன்னணி ஹீரோவாக்கியது. இந்தியாவின் மைக்கேல் ஜாக்ஸன் என்று புகழப்பட்டார் அவர்.

ஹீரோவாக வெற்றிகரமாக ஆரம்பித்த அவரது பயணம், கடைசியில் தேய்பிறையானது.
சுதாரித்துக் கொண்ட பிரபு தேவா, தெலுங்கில் ஒரு படத்தை இயக்கினார். படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது.
அடுத்து தமிழில் போக்கிரி படத்தை இயக்கினார். அந்தப் படமும் பெரிய வெற்றி. அதே படத்தை இந்தியில் எடுத்தார். அந்தப் படும் தாறுமாறாக ஓடியது.
இப்போது பாலிவுட்டில் அதிகம் விரும்பப்படும் இயக்குநர் பிரபுதேவாதான். இப்போது ஆக்ஷன் ஜாக்ஸன் என்ற படத்தை இயக்கி வரும் அவர், அடுத்து இயக்கும் படத்துக்கு ரூ 30 கோடி சம்பளம் பெறுகிறார்.
இதன் மூலம் பாலிவுட்டில் இதுவரை 20 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வந்த ரோஹித் ஷெட்டியைப் பின்னுக்கு தள்ளிவிட்டார். அதுமட்டுமல்ல, மெகா இயக்குநர் ஷங்கருக்குக் கூட ரூ 20 கோடிதான் சம்பளம்.
புதுப்படத்துக்கு இவர் பெற்ற அட்வான்ஸ் மட்டுமே ரூ 17 கோடியாம்.