Prabhu Deva - முதன்முறையாக குழந்தையை வெளியே காட்டிய பிரபுதேவா.. திருப்பதியில் சாமி தரிசனம்
சென்னை: Prabhu Deva (பிரபுதேவா) தனக்கு பிறந்த பெண் குழந்தையுடன் பிரபுதேவா திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
இந்தியாவின் சிறந்த நடன அமைப்பாளர் பிரபுதேவாவின் கோரியோகிராஃபியயில் அனைத்து நடிகர்களுமே சிறப்பான நடனத்தை வெளிப்படுத்துவார்கள். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைத்தார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மீனா; இருப்பதிலேயே ரொம்பவும் கடினமான கோரியகிராஃபர் என்றால் அது பிரபுதேவாதான் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரபுதேவா: நடன அமைப்பாளராக மட்டுமின்றி பிரபுதேவா நடிகராகவும் புகழ் பெற்றவர். காதலன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரபுதேவா தொடர்ந்து ராசைய்யா, விஐபி, மின்சாரக்கனவு, டைம் என ஏராளமான படங்கள் நடித்தார். அந்தப் படங்களும் ஹிட்டாகின. இதனால் 90களில் முன்னணி நடிகர்கள் வரிசையில் பிரபுதேவா இருந்தார். மேலும் காதல் கொண்டேன் படத்துக்கு ஹீரோவாக நடிக்க முதலில் செல்வராகவன் பிரபுதேவாவைத்தான் அணுகினார் என்பது நினைவுக்கூரத்தக்கது. பிரபுதேவா கடைசியாக பகீரா படத்தில் நடித்திருந்தார். படம் படுதோல்வியை சந்தித்தது.
டைரக்டர் பிரபுதேவா: நடிகர், நடன அமைப்பாளராக கலக்கிவந்த பிரபுதேவா 2005ஆம் ஆண்டு இயக்குநராகவும் அறிமுகமானார். அவர் தெலுங்கில் இயக்கிய முதல் படம்தான் தமிழில் சம்திங் சம்திங் படமாக ரீமேக்காகியது. அதனையடுத்து தமிழில் போக்கிரி, வில்லு, வெடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் ஹிந்தியில் வாண்டட் (போக்கிரி ரீமேக்), ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா, தபாங் 3 உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.
சர்ச்சைகள்: பிரபுதேவாவை சுற்றி சர்ச்சைகளும் வட்டமடித்தன. தன்னுடன் நடனம் ஆடிய ரமலத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதற்கிடையே நயன்தாராவை காதலித்தார். பிரபுதேவாவுக்காக நயன் மதம் மாறவும் செய்தார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை இருவரின் காதலும் பிரேக் அப்பில் முடிந்தது.
இரண்டாவது திருமணம்: நயனுடனான பிரேக் அப்பிற்கு பிறகு சிங்கிளாக இருந்த பிரபுதேவா சில வருடங்களுக்கு முன்னதாக மருத்துவர் ஹிமானி சிங் என்பவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. அதனை பிரபுதேவா மகிழ்ச்சியுடன் அறிவிக்கவும் செய்து இனி அவர்களுக்காக நேரம் ஒதுக்க முடிவு செய்திருக்கிறேன். எனவே சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கிவிடுவேன் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பதியில் தரிசனம்: இந்நிலையில் பிரபுதேவா தனது மனைவி ஹிமானி சிங் மற்றும் பெண் குழந்தையுடன் திருப்பதிக்கு நேற்று இரவு சென்றார். அதனையடுத்து இன்று காலை விஐபி பிரேக் மூலம் குடும்பத்தினருடன் கடவுள் வழிபாடு செய்தனர். மேலும் அங்கு தீர்த்த பிரசாதத்தையும் பெற்றுக்கொண்டனர்.


Click it and Unblock the Notifications











