பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.... கோலிவுட்டில் பிஸியாகும் பிரபுதேவா!

சென்னை : நடிகர் பிரபுதேவா வரிசையாக பல திரைப்படங்களை கையில் வைத்துள்ளார்.

கோலிவுட்டில் படு பிஸியான நடிகராக மாறியுள்ளார் பிரபுதேவா.

இரண்டாம் குத்து இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமாரின் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் கமிட்டாகி உள்ளார் பிரபுதேவா. அந்த படத்தின் பூஜை நேற்று படப்பிடிப்புடன் தொடங்கியது.

படப்பிடிப்பு தொடக்கம்

படப்பிடிப்பு தொடக்கம்

இரண்டு அறையில் முரட்டு குத்து புகழ் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமாருடன் நடிகர் பிரபு தேவா இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தற்போது தொடங்கி உள்ளது. அந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி உள்ளன. சந்தோஷ் பி ஜெயக்குமாருடன் பிரபு தேவா முதன்முறையாக இணைந்துள்ளார்.

சுவாரசியமான கதை

சுவாரசியமான கதை

இந்த படத்தை எஸ் வினோத் குமாரின் மினி ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. வினோத் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கிய விஷால் - ஆர்யா நடிக்கும் எதிரி படத்தை தயாரிக்கிறார். ஹரா ஹரா மகாதேவகி, இருண்டு அறையில் முரட்டு குத்து, இரண்டாம் குத்து போன்ற படங்களை கொடுத்த சந்தோஷ் பி ஜெயக்குமார், இந்த முறை பிரபு தேவாவுக்காக ஒரு சுவாரஸ்யமான அதிரடி ஸ்கிரிப்டை எழுதியுள்ளார்.

லீட்ரோலில்

லீட்ரோலில்

பிக் பாஸ் மூலம் தமிழில் பரபரப்பான ரைசா வில்சன் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இப்படம் ஒரு அதிரடி பொழுதுபோக்கு அம்சம் கொண்ட திரைப்படமாக இருக்கும். இந்த பெயரிடப்படாத படத்திற்கு பல்லூ ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள உள்ளார். டி இமான் இசையமைக்க உள்ளார். இந்த தகவலை சந்தோஷ் பி ஜெயக்குமார் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திற்கு பகிர்ந்துள்ளார்.

கைவசம் பல படங்கள்

கைவசம் பல படங்கள்

நடிகர் பிரபு தேவா பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது இவர் கோலிவுட்டில் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். பிரபு தேவா நடித்துள்ள பொன் மாணிக்கவேல், பஹீரா , யங் மங் சங் போன்ற திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. பிரபு தேவா பிளாஷ்பேக், மை டியர் பூதம் என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X