மூன்றாவது முரட்டுக் குத்து ரெடியாகுதா? இரண்டாம் குத்து இயக்குநர் படத்தில் இணைந்த பிரபுதேவா!

சென்னை: இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் புதிய படத்தில் பிரபுதேவா நடிக்க உள்ளார். அந்த படத்தின் பட பூஜை இன்று நடைபெற்றது.

ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து, கஜினிகாந்த், இரண்டாம் குத்து உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார்.

இந்த படத்தில் நடிகை ரைசா வில்சன், வரலக்‌ஷ்மி சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

அடல்ட் பட இயக்குநர்களுடன்

அடல்ட் பட இயக்குநர்களுடன்

நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் என இந்தியளவில் கலக்கி வரும் நடிகர் பிரபுதேவா திடீரென அடல்ட் பட இயக்குநர்களுடன் கைகோர்க்க ஆரம்பித்துவிட்டாரே என்ன விஷயம் என கோடம்பாக்கத்தில் ஒரே பேச்சாக உள்ளது. பஹீரா படத்தைத் தொடர்ந்து சந்தோஷ் பி. ஜெயக்குமார் படத்தில் பிரபுதேவா நடிப்பது தான் இதற்கு காரணம்.

அதுதான் ஹிட் ஆகுது

அதுதான் ஹிட் ஆகுது

நடிகர் கெளதம் கார்த்திக்கை வைத்து ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் இரண்டாம் குத்து என இரு அடல்ட் கன்டென்ட் படங்களை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் ஆர்யாவை வைத்து காதல் காமெடி படமான கஜினிகாந்தை எடுத்து ஃபிளாப் கொடுத்தார். மீண்டும் இரண்டாம் குத்து படத்தை இயக்கி அடல்ட் பட உலகிற்கு கம்பேக் கொடுத்தார்.

ஹீரோ வொர்க்கவுட் ஆகல

ஹீரோ வொர்க்கவுட் ஆகல

தீபாவளி ரிலீசாக படம் வெளியானாலும் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் ஹிட்டான அளவுக்கு இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமாரே ஹீரோவாக நடித்த இரண்டாம் குத்து ஹிட் ஆகவில்லை. அதனால், இனி வேற ஹீரோவை தேடுவோம் என அலைந்த அவருக்கு அடல்ட் பட இயக்குநர்களை தேடிக் கொண்டிருந்த பிரபுதேவா சிக்கிவிட்டார் என்றே சமூக வலைதளங்களில் இவர்களின் புதிய கூட்டணி பற்றிய பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ஏகப்பட்ட ஹீரோயின்கள்

ஏகப்பட்ட ஹீரோயின்கள்

கிட்டத்தட்ட 8 கோலிவுட் ஹீரோயின்கள் நடிப்பில் திரிஷா இல்லைனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பஹீரா எனும் படத்தில் காம சைக்கோ கொலைகாரனாக நடிகர் பிரபு நடித்துள்ளார். இந்நிலையில், அடுத்ததாக இரண்டாம் குத்து இயக்குநருடன் கைகோர்த்து இருக்கிறார் பிரபுதேவா.

மூன்றாவது குத்தா

மூன்றாவது குத்தா

இன்னொரு அடல்ட் படமாக இந்த படம் உருவாகப் போகிறதா என்கிற சந்தேகத்தை ரசிகர்கள் கிளப்பி விடக் கூடாது என்பதற்காக அறிவிப்பிலேயே இந்த படம் ஆக்‌ஷன் திரைப்படம் என அறிவித்து விட்டனர். பட பூஜையுடன் இன்று ஷூட்டிங் தொடங்கிய நிலையில், படக்குழுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Recommended Video

Silambharasan Live : இந்த பழக்கத்தை விட்டு 1 வருஷம் ஆகுது | Maanadu
இரண்டு ஹீரோயின்கள்

இரண்டு ஹீரோயின்கள்

இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு வரலக்‌ஷ்மி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன் என இரு ஹீரோயின்கள் இணைந்துள்ளனர். இன்று நடைபெற்ற பட பூஜை விழாவில் நடிகை ரைசா வில்சன் கலந்து கொண்டார். கூடிய விரைவிலேயே நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமாரும் படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X