twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரயிலில் கொல்ல முயன்று காப்பாற்றப்பட்ட குழந்தையை தத்தெடுக்க பிரபுதேவா, லாரன்ஸ் விருப்பம்!

    By Shankar
    |

    Prabhu Deva and Ragava Lawrence
    சென்னை: ஓடும் ரயிலிலிருந்து தாய் வீசிய பச்சிளம் குழந்தை காப்பாறப்பட்டதல்லவா... அந்தக் குழந்தையை பராமரிக்க நடிகர்கள் பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரயிலில் ஒரு பெண் பிளாஸ்டிக் பையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு வந்தார். குழந்தையின் அழுகுரல் கேட்டு பயணிகள் பையை வாங்கி பார்த்தனர். அப்போது உள்ளே குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    திடீரென்று அப்பெண் குழந்தையை பையில் சுற்றி ரெயிலில் இருந்து தூக்கி வீச முயன்றாள். பயணிகள் அவளை மடக்கி பிடித்து குழந்தையை மீட்டனர். தாம்பரம் போலீசார் விசாரித்தபோது வேறு ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் பெண் குழந்தை பிறந்ததாக தெரிவித்தாள். அவள் பெயர் சித்ரா என்று தெரியவந்தது.

    மனித உரிமைகள் கழக மாநில மகளிர் அணி அமைப்பாளரும் ஜான்சிராணி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சங்க தலைவியுமான கல்பனாவிடம் அக்குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு கிருஷ்ணவேணி என பெயரிட்டுள்ளனர். குழந்தை 3.5 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இந்த குழந்தையை தத்து எடுத்து வளர்க்க விருப்பம் தெரிவித்து நடிகர்கள் பிரபுதேவா, லாரன்ஸ் ஆகியோர் அணுகியுள்ளனர். நடிகை விசாலி கண்ணதாசனும் தன்னிடம் தத்து கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

    மனித உரிமைக்கழக தலைவர் சுரேஷ் கண்ணன், சென்னை மாவட்ட அமைப்பாளர் வக்கீல் அசோக்குமார் ஆகியோர் சட்டப்பூர்வமான முறையில் குழந்தையை தத்து கொடுப்பது பற்றி ஆலோசித்து வருகின்றனர்.

    English summary
    Actors Prabhu Deva, Ragava Lawrence, Poetess Vishali have expressed their wish to adopt the female child that saved by passengers while her mother try to kill in the the running train.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X