Actor Vijay: GOAT சூட்டிங்கில் விஜய்க்கு கதை சொன்ன பிரபுதேவா.. இப்படி ஆயிடுச்சே!
சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் சமீபத்தில் கேரளாவில் நடந்து முடிந்துள்ளது. முன்னதாக சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்த நிலையில், சூட்டிங் ஸ்பாட்டில் ஏராளமான ரசிகர்கள் விஜய்யை சந்தித்து ஆரவாரம் செய்ததை பார்க்க முடிந்தது. தமிழ்நாட்டுக்கு இணையாக கேரளாவிலும் அவருக்கு ஏராளமான வெறித்தனமான ரசிகர்கள் காணப்படுவதையும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பார்க்க முடிந்தது. சூட்டிங் ஸ்பாட்டில் கேரள ரசிகர்களை சந்தித்து பேசிய விஜய், தனது நெகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார்.
தமிழ்நாடு மற்றும் கேரள ரசிகர்கள் தனது கண்களை போன்றவர்கள் என்று அவர் பேசினார். இந்நிலையில் கேரள சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா உள்ளிட்டவர்கள் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்ததாக மாஸ்கோவில் நடக்கவுள்ள சூழலில் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் படக்குழுவினர் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். மாஸ்கோவில் தொடர்ந்து GOAT படத்தின் சூட்டிங் இரு வாரங்கள் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னை, பாங்காக, கேரளா ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட சூட்டிங்கை மாஸ்கோவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகள் முன்னதாகவே நடந்து முடித்துள்ள நிலையில் ஏப்ரல் முதல் வாரத்தில் படக்குழுவினர் மாஸ்கோ செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரு வேறு கெட்டப்புகளில் நடித்து வருகிறார். அவரது கெட்டப் போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.
டீ ஏஜிங் தொழில்நுட்பம்: சில கலவையான விமர்சனங்களையும் இந்த போஸ்டர்கள் பெற்றுள்ள நிலையில் படம் ரசிகர்களை எந்த அளவில் ஈர்க்கும் என்பது குறித்து படத்தின் ரிலீஸை தொடர்ந்து தெரிய வரும். இந்தப் படத்தில் மகன் கேரக்டருக்காக விஜய்க்கு டீ ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி கேரளாவில் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்ட ஷூட்டிங்கிலும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.
கேரளா சூட்டிங்: மேலும் வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட வெங்கட் பிரபுவின் கேங்கும் இந்த படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படத்தின் கேரள சூட்டிங்கில் விஜய்யுடன் இணைந்து பிரபுதேவாவும் பங்கேற்றதை காண முடிந்தது. சூட்டிங்கிற்காக கேரளா சென்ற பிரபுதேவா, முன்னதாக சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயிலில் சாமி கும்பிடும்படியான புகைப்படங்கள் வெளியாகின. பிரபுதேவா நடன இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகர் இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார். கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களை இயக்கியுள்ளார்.
விஜய்க்கு கதை சொன்ன பிரபுதேவா: இந்நிலையில் GOAT சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய்க்கு பிரபுதேவா ஒரு சிறப்பான கதையை சொல்லியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நடித்துவரும் GOAT படத்தின் சூட்டிங்கை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் விஜய். இந்தப் படத்தை தொடர்ந்து அவர் சினிமாவில் இருந்து விலகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் அறிவிப்பு அடுத்த மாதத்தில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கவுள்ள நிலையில் இயக்குநர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்த ரேஸில் ஹெச் வினோத், வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் உள்ள நிலையில் பிரபுதேவா இந்தப் படத்தை இயக்க வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











