எனக்கு திருமண ஆசையே இல்லை.. சினிமா, என் குழந்தைகள்தான் உலகம்!- பிரபு தேவா

By Shankar

சென்னை: திருமணம் செய்து கொள்ளும் ஆசையே எனக்கு இல்லை. இனி எல்லாமே சினிமா மற்றும் குழந்தைகள்தான். செய்ய வேண்டிய வேலைகள் அவ்வளவு இருக்கு, என்கிறார் இயக்குநர் பிரபு தேவா.

இந்தியாவிலேயே 'மோஸ்ட் வான்ட்டட்' இயக்குநர் என்றால் இன்றைய தேதிக்கு பிரபு தேவாதான்.

தமிழ், தெலுங்கு, இந்தி என அத்தனை மொழிகளிலும் அவருக்கு அவ்வளவு வாய்ப்புகள். ஆனால் அவரோ, இப்போதைக்கு இந்தியில் படங்கள் பண்ணுவோம் என்ற முடிவுடன் மும்பையில் செட்டிலாகிவிட்டார்.

இன்றைக்கு இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் சினிமா இயக்குநரும் பிரபு தேவாதான். கேட்டால், 'அப்படியா சந்தோஷமாத்தான் இருக்கு... ஆனா நம்மளவிட அப்பா தாத்தால்லாம் இருக்காங்க சார்' என்கிறார் வெள்ளந்தியாக!

நன்றி சந்திப்பு

நன்றி சந்திப்பு

ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு சென்னை வந்த பிரபு தேவா, செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்து கேட்டபோது, "நான் தமிழில் இப்போது படங்கள் பண்ணாவிட்டாலும், தொடர்ந்து என்னைப் பற்றி தமிழ்ப் பத்திரிகையாளர்கள் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களைச் சந்தித்துப் பேச வேண்டும், ஒரு நன்றி சொல்ல வேண்டும் என ஆசைப்பட்டேன். அதற்குத்தான் இந்தச் சந்திப்பு,' என்றார்.

படங்கள்

படங்கள்

இப்போது என்னென்ன படங்கள் இயக்குகிறீர்கள்? என்று கேட்டபோது, "இந்தியில் அஜய் தேவ்கானை வைத்து ஆக்ஷன் படம் இயக்குகிறேன். பெயர் ஆக்ஷன் ஜாக்ஸன். அடுத்து அக்ஷய்குமாரை வைத்து படம் எடுக்கிறேன். ஏ.பி.சி.டி. பார்ட்-2 என்ற இந்திப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. நல்ல கதை அமைந்தால் நடிப்பேன்," என்றார்.

தமிழில் எப்போ?

தமிழில் எப்போ?

தமிழில் படம் இயக்குவது குறித்து கேட்டதற்கு, "தமிழ்ப்பட உலகை ஒருபோதும் மறக்க மாட்டேன். இங்கிருந்துதானே ஆரம்பமே... ஆனால் எப்போது மீண்டும் தமிழ்ப் படம் இயக்குவேன் என்று சொல்ல முடியாது," என்றார்.

தயாரிப்பு

தயாரிப்பு

சொந்தப் பட நிறுவனம் தொடங்கி, திறமையான இயக்குநர்களுக்கு வாய்ப்பு தரும் திட்டம் உள்ளதா? என்றதற்கு, "நிறைய நண்பர்கள் இப்படிக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். விரைவில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்," என்றார்.

ரூ 25 கோடி

ரூ 25 கோடி

ரூ 25 கோடி சம்பளம் வாங்குகிறீர்களாமே? என்ற போது, "கேட்க நல்லா இருந்தாலும், இதெல்லாம் உண்மையில்ல சார். என்னை விட அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்கள் இருக்கிறார்கள்.

தமிழ்ப் படங்கள்

தமிழ்ப் படங்கள்

தமிழ் படங்களுக்கும் நல்ல மார்க்கெட் உள்ளது. இங்குள்ள கதாநாயகர்களும் கொடிகட்டி பறக்கிறார்கள். இந்திஇயக்குநர்கள் தமிழ்ப் படங்களை ஆர்வமாக கவனிக்கின்றனர்.

கமர்ஷியல்தான்

கமர்ஷியல்தான்

விருது படங்களை இயக்கும் எண்ணம் இல்லை. எனக்கு அந்த அளவு புத்திசாலித்தனம் இல்லை. கமர்ஷியல் படங்கள் எடுக்கவே விரும்புகிறேன்.

விஜய்

விஜய்

தமிழ் நடிகர்களில் விஜய் சிறப்பாக நடனம் ஆடக் கூடியவர். நேரம் கிடைத்தால் டான்ஸ் மாஸ்டராகவும் பணியாற்றுவேன்.

திருமணம் வேண்டாம்

திருமணம் வேண்டாம்

மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. தனியாக வாழ்வது எனக்கு சந்தோஷம்தான். இனி எனக்கு எல்லாமே சினிமாவும் என் குழந்தைகளும்தான். இந்த வாழ்க்கையும் நன்றாகத்தான் இருக்கிறது," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X