twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழன்டா: வேட்டி, சட்டையில் சென்று பத்மஸ்ரீ விருது வாங்கிய பிரபுதேவா

    By Siva
    |

    சென்னை: பிரபுதேவா, டிரம்ஸ் சிவமணி, மோகன்லால், ஷங்கர் மகாதவேன் உள்ளிட்டோருக்கு இன்று பத்ம விருதுகள் வழங்கப்பட்டது.

    112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு 50 ஆயிரம் பரிந்துரைகள் வந்தன. அதில் இருந்து 112 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள்.
    இந்நிலையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது.

    இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    நெஞ்சை பதறவைக்கும் 'இந்த கொடுமை' பற்றி ஒரேயொரு ட்வீட் போடுவீங்களா ரஜினி சார்? நெஞ்சை பதறவைக்கும் 'இந்த கொடுமை' பற்றி ஒரேயொரு ட்வீட் போடுவீங்களா ரஜினி சார்?

    பிரபுதேவா

    டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனரான பிரபு தேவாவுக்கு பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். பிரபுதேவா தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்தார்.

    பத்ம பூஷன்

    மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

    ஷங்கர் மகாதேவன்

    இசையமைப்பாளரும், பாடகருமான ஷங்கர் மகாதேவன் பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

    சிவமணி

    டிரம்ஸ் சிவமணிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இன்று 56 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு வரும் 16ம் தேதி வழங்கப்பட உள்ளது.

    English summary
    Celebrities Prabhu Deva, Mohanlal, Shankar Mahadevan, Drums Sivamani and 52 others received Padma awards today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X