ஓஜி டியூட்.. டபுள்ஸ் பிரபுதேவா.. 2 மனைவிகளுடன் ‘மூன்வாக்’ ஹனிமூன் போறாரா?
சென்னை: 'மூன்வாக்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் புது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பிரபுதேவா, இரண்டு பெண்களுக்கு நடுவே மாலையும் கழுத்துமாக இருக்கிறார். இந்த போஸ்டர் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களை மனதில் இடம்பிடித்த முக்கியமானவர்களாக இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானும், நடனப்புயல் பிரபுதேவா இருந்தனர். இவர்களின் கூட்டணியில் வெளியான 'காதலன்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அந்த படத்தை தொடர்ந்து,லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு என அடுத்தடுத்து படங்களில் இணைந்து இருந்தனர். அந்த அபடங்களில் கொடுத்த ஹிட் பாடல்கள் இன்று வரை ரசிகர்களுக்கு பிடித்த பாடலாக உள்ளது.

பிரபுதேவாவின் ஹனிமூன் வாக்: அதன் பிறகு இருவரும் இணையாம் இருந்த நிலையில், சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு, இவர்கள் இருவரும் மீண்டும் மூன்வாக் படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இயக்குனர் என்.எஸ். மனோஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'மூன்வாக்' படத்தில், மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய அதே பெயரைக் கொண்ட நடன அசைவை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இசை, நடனம், நகைச்சுவை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகி உள்ளது. இதில், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.
யோகிபாபு டபுள் ஆக்ஷன்: யோகிபாபு இரண்டு வேறு கதாபாத்திரங்களில் "ஆட்டுக்கால் அழகு ராசா" மற்றும் "கவரிமான் நாராயணன்" என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அந்த போஸ்டர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் உலகளாவிய தியேட்டர் விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் பெற்றுள்ளது. படத்தை பிஹைன்வுட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் இசை வெளியீட்டு உரிமையை லஹரி மியூசிக் பெற்றுள்ளது. குடும்பம் முழுவதும் ரசிக்கும் வகையில் காமெடி கலந்த மியூசிக்கல் என்டர்டெய்னராக படமாக இப்படம் உருவாகி உள்ளது.
ஹனிமூன் வாக்: இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து, இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் புது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், பிரபுதேவா திருமண கோலத்தில் மாலையுடன் இரண்டு பெண்களுக்கு நடுவே நிற்கிறார். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் டிரெண்டாகி, பிரபுதேவா 'மூன்வாக்' போகிற மாதிரி தெரியவில்லை, 2 மனைவிகளுடன் ஹனிமூன் வாக் போகிறார் இணையவாசிகள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











