பிரபுதேவா – தமன்னாவின் 'காந்தா'
சென்னை: பிரபுதேவா- தமன்னா நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு காந்தா என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் ஏ.எல்.விஜய், பிரபுதேவா, தமன்னா, ஆர்ஜே பாலாஜி மற்றும் சோனு சூட் ஆகியோரை வைத்து திகில் படமொன்றை இயக்கி வருகிறார்.
பிரபுதேவா நாயகனாக நடிப்பதோடு இப்படத்தை தயாரித்தும் வருகிறார். ஏப்ரல் மாதம் இறுதியில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு காந்தா என்று தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திகில் படமென்பதால் இந்தத் தலைப்பை வைத்திருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி என்று 3 மொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது.
வினோதன், போகன், காந்தா என ஒரே நேரத்தில் பிரபுதேவா தமிழில் 3 படங்களைத் தயாரித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











