முதல் மனைவிக்கு 100 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுத்தாரா பிரபுதேவா?.. இது வேற நடந்திருக்கா?.. வேற லெவல்
சென்னை: இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்படும் பிரபுதேவா முதலில் ரமலத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இப்போதிருக்கும் இரண்டு மகன்களில் ஒருவர் நடன துறையில் இருக்கிறார். இதற்கிடையே ரமலத்தை விவாகரத்து செய்த பிரபுதேவா; நயன்தாராவை காதலித்து பிரேக்கப் செய்து; இப்போது ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்திருக்கிறார்.
இந்திய திரையுலகில் மூத்த நடன அமைப்பாளர்களில் ஒருவர் சுந்தரம் மாஸ்டர். அவரது மகன்களில் ஒருவரான பிரபுதேவா தனது தந்தையின் க்ரூப்பில் நடனம் ஆடி; பிறகு நடன அமைப்பாளராக மாறியவர். புலி எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதற்கேற்ப பிரபுதேவா தனது கோரியோகிராஃபியில் பட்டாசாக இருந்தார். இதனால் இவரும் இந்தியா முழுவதும் மிக விரைவில் பிரபலமடைந்துவிட்டார்.
ஹீரோ பிரபுதேவா: நடன அமைப்பாளராக இருந்து அனைவரையும் ஆட்டுவித்த பிரபுதேவா இந்து படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவர் நடித்த காதலன், டைம், பெண்ணின் மனதை தொட்டு, வானத்தைப்போல போன்ற படங்கள் மெகா ஹிட்டாகின. இதன் காரணமாக பிரபுதேவாவுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் ஒன்றும் உருவானது குறிப்பிடத்தக்கது.

இயக்குநராகவும்: கோரியோகிராஃபர், நடிகர் என்பது மட்டுமில்லாமல் இயக்குநராகவும் வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். தமிழில் போக்கிரி, ஹிந்தியில் வான்டட், ரவுடி ரத்தோர் என ஹிட் படங்களை கொடுத்த அவர் இப்போது இயக்கத்திலிருந்து ஒதுங்கி நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் GOAT, ஜாலியோ ஜிம்கானா ஆகிய படங்கள் ரிலீஸாகி தோல்வியை சந்தித்திருந்தன.
பெர்சனல் வாழ்க்கை: இதற்கிடையே தன்னுடன் ஆரம்ப காலத்தில் நடனமாடிய ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேருக்கும் மூன்று மகன்கள் பிறந்தார்கள். ஒருவர் சிறு வயதிலேயே உயிரிழந்துவிட்டார். சூழல் இப்படி இருக்க வில்லு படத்தின்போது நயன்தாராவுடன் ஏற்பட்ட காதல் காரணமாக முதல் மனைவியை பிரிந்தார். சட்டப்பூர்வமாக விவாகரத்தும் பெற்றார். ஆனால் நயனையும் அவர் பிரேக்கப் செய்துவிட்டார். பிறகு ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்து செட்டிலாகியிருக்கிறார்.
100 கோடி ரூபாய் ஜீவனாம்சம்?: ரமலத்தை பிரிந்தாலும் தனக்கும் ரமலத்துக்கும் பிறந்த மகன்களை விட்டு விலகவில்லை பிரபுதேவா. தனது மகன்களில் ஒருவரை சமீபத்தில்தான் மேடையில் ஒரு கான்செர்ட்டின்போது அறிமுகப்படுத்தினார். தங்களது பிள்ளைகளின் மீது இன்னமும் அவருக்கு பாசம் குறையவில்லை என்றுதான் ரமலத்தும் அண்மையில் கொடுத்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகை குட்டி பத்மினி தான் வெளியிட்டிருக்கும் வீடியோவில் ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்.
அவர் அந்த வீடியோவில், "பிரபுதேவா தனது முதல் மனைவியை பிரிந்தபோது அவருக்கு ஜீவனாம்சமாக 100 கோடி ரூபாய் கொடுத்தார். இதுபோல் இந்தியாவிலேயே வேறு யாரும் கொடுத்ததில்லை என்று வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் என்னிடம் கூறினார். பிரபுதேவா இதனை விருப்பமில்லாமல் கொடுக்கவில்லை. முழு விருப்பதுடன்தான் கொடுத்தார்" என்றார். இந்தத் தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











