Petta Rap: இந்தி தெரியலையேனு கஷ்டமா இருக்கு.. சன்னி லியோனுடன் பேச முடியல - பேரரசு

சென்னை: நடிகர் பிரபுதேவா தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவின் அடையாளமாக உள்ளார். தென்னிந்தியாவில் நடன இயக்குநராக, நடிகராக ஜொலித்து வந்த பிரபு தேவா, ஒருகட்டத்திற்கு மேல் இந்தி சினிமாவுக்குச் சென்று அங்கும் நடன இயக்கத்தில் கோலோச்சி வருகின்றார். இதுமட்டும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் படங்கள் இயக்கவும் செய்கின்றார். பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட ராப் படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு தனக்கு இந்தி தெரியவில்லையே என வருத்தமாக இருப்பதாக கூறியுள்ளார்.

பிரபுதேவா தற்போது விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் . மேலும் இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட ராப். இந்த படத்தில் வேதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சன்னி லியோனும் நடித்துள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ப்ளூ ஹில் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தினை எஸ்.ஜே. சினு இயக்கியுள்ளார்.

prabhu deva petta rap sunny leone

பேட்ட ராப்: இந்த படம் முழுக்க முழுக்க நடனம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ளதால் இந்த படம் பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடிக்கும் என படக்குழு நம்புகின்றது. காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. ஏற்கனவே சிலம்பாட்டம் படத்தில் இடம்பெற்ற நலம்தானா பாடலின் ரீமேக்கில் வேதிகா தனது அசாத்திய நடனத்திறமையை வெளிப்படுத்தியிருப்பார். இதனால் பிரபுதேவாவுக்கு இணையாக வேதிகா எந்த அளவுக்கு ஆடப்போகின்றார் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். வேதிகா தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பேட்ட ராப் படம் குறித்த அப்டேட்களையும் புரோமோசன்களையும் கொடுத்து வருகின்றார்.

prabhu deva petta rap sunny leone

சன்னி லியோன்: படத்தின் டீசரை ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக பேட்ட ராப் படத்தின் டீசரை நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். டீசரில் சன்னி லியோன் தலைகீழாக பல்டி அடிக்கும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

prabhu deva petta rap sunny leone

இந்தி: படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்விக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக பேட்ட ராப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பேரரசு, முன்பெல்லாம் இந்தி தெரியவில்லை என்றால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இந்தி தெரியாது போடா என கூறுவோம். ஆனால் இப்போது இந்தி தெரியவில்லை என வருத்தமாக உள்ளது. காரணம், மேடையில் எனக்கு அருகில் நடிகை சன்னி லியோன் அமர்ந்துள்ளார். அவரிடம் இரண்டு வார்த்தைகள் கூட பேச முடியவில்லை. இந்தி தெரிந்திருந்தால் அவரிடம் பேசியிருக்க முடியும். இந்தி தெரியவில்லை என வருத்தமாக உள்ளது. இதுக்காகவே இந்தி கத்துக்கனும் என நகைச்சுவையாகக் கூறினார்.

prabhu deva petta rap sunny leone

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X