பிரபு தேவா சன்னிலியோனின் பேட்ட ராப் படத்தின் டீசரை வெளியிடும் விஜய் சேதுபதி!
சென்னை: நடிகர் பிரபுதேவா தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவின் அடையாளமாக உள்ளார். தென்னிந்தியாவில் நடன இயக்குநராக, நடிகராக ஜொலித்து வந்த பிரபு தேவா, ஒருகட்டத்திற்கு மேல் இந்தி சினிமாவுக்குச் சென்று அங்கும் நடன இயக்கத்தில் கோலோச்சி வருகின்றார். இதுமட்டும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் படங்கள் இயக்கவும் செய்கின்றார். இவரது இயக்கத்தில் தமிழில் வெளியான முதல் படமான போக்கிரி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதாவது ஜூன் 21ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
பிரபுதேவா தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கோட் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். மேலும் இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட ராப். இந்த படத்தில் வேதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சன்னி லியோனும் நடித்துள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ப்ளூ ஹில் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தினை எஸ்.ஜே. சினு இயக்கியுள்ளார்.

பேட்ட ராப்: இந்த படம் முழுக்க முழுக்க நடனம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ளதால் இந்த படம் பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடிக்கும் என படக்குழு நம்புகின்றது. காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. ஏற்கனவே சிலம்பாட்டம் படத்தில் இடம்பெற்ற நலம்தானா பாடலின் ரீமேக்கில் வேதிகா தனது அசாத்திய நடனத்திறமையை வெளிப்படுத்தியிருப்பார். இதனால் பிரபுதேவாவுக்கு இணையாக வேதிகா எந்த அளவுக்கு ஆடப்போகின்றார் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

டீசர் வெளியீடு: விஜய் சேதுபதி இந்நிலையில் படத்தின் டீசர் நாளை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி பேட்ட ராப் படத்தின் டீசரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி காலை 11 மணிக்கு வெளியிடவுள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது. இது பேட்ட ராப் படத்தினை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஜா படம்: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான அவரது 50வது படமான மகாராஜா படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ளது. படம் கடந்த 14ஆம் தேதி வெளியாகி இதுவரை ரூபாய் 55 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த படத்தினை குரங்கு பொம்பை படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். படத்தில் இயக்குநர் சிங்கம் புலி, ஒளிப்பதிவாளர் நட்டி, பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதேபோல் வேதிகா நடிப்பில் வெளியான யாஷினி வெப் சீரியஸ் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications











