பிரபு தேவாவின் திடீர் தெலுங்குப் பாசம்!

இது கொஞ்சம் கான்ட்ராவர்சி ஆகிவிட்டால், டஅய்யய்யோ... நான் அப்படிச் சொல்லவே இல்ல, வேணும்னே அந்த ரிப்போர்ட்டர் அப்படி எழுதிட்டார்' என்று பல்டியடிப்பதும் கூட வழக்கம்தான்.
இதோ இதில் முதலில் சொன்ன நடிகர் பட்டியலில் இப்போது சேர்ந்திருப்பவர் பிரபு தேவா.
இவர் நடன இயக்குநராக அறிமுகமானது ஒரு தமிழ்ப் படத்தில்தான். ஒற்றைப் பாடலுக்கு நடனமாடுபவராக வாழ்க்கையைத் தொடங்கியது இதயம் படத்தில். ஞ ஜென்டில்மேனில் வந்த சிக்குபுக்கு ரயிலேதான் இவரை பாப்புலராக்கியது. காதலன் படத்தில் ஹீரோவானார். ஒரு தமிழ் முஸ்லிம் பெண்ணைத்தான் விரட்டி விரட்டி காதலித்து கல்யாணம் பண்ணார்.
சுத்தமாக மார்க்கெட் போன நிலையில்தான் தெலுங்குக்குப் போனார். இரண்டு படங்கள் இயக்கினார். ஆனால் தமிழில் நான்கு படங்கள்...
ஆனால் சமீபத்தில் அவர் ஹைதராபாதில் பேசியிருப்பதைப் பாருங்கள்...
"தெலுங்கு சினிமா எப்போதுமே என் இதயத்துக்கு நெருக்கமானது. காரணம், பாலிவுட்டில் இன்று நான் இருக்கும் நிலைக்குக் காரணம், தெலுங்கு சினிமாவில் நான் சாதித்தவைதான். என் வாழ்க்கையில் அனைத்துமே தொடங்கியது இங்கிருந்துதான். அதனால் ஹைதராபாத் எனக்கு வீடு மாதிரி உணர்கிறேன்," என்றார்.
அடடா, உங்க வீட்டை அந்த 'வீட்டிலேயே' கட்டியிருக்கலாமே... எதுக்கு சென்னையில் கட்டிக்கிட்டு வேண்டா வெறுப்பா வாழறீங்க பிரபுதேவா?


Click it and Unblock the Notifications











