அதெல்லாம் வேண்டாம்.. நயன்தாராவுக்கு பிரபுதேவா இத்தனை கண்டிஷன்கள் போட்டாரா?.. தீயாய் பரவும் தகவல்

சென்னை: பிரபுதேவா இந்தியாவில் புகழ் பெற்ற நடன அமைப்பாளர்களில் ஒருவர். அதுமட்டுமின்றி பல படங்களில் ஹீரோவாக நடித்து அப்ளாஸை அள்ளிய அவர் வெற்றிகரமான இயக்குநர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். அவர் தமிழில் இயக்கிய போக்கிரி திரைப்படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. தற்போது விஜய்யுடன் GOAT படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; நயன்தாராவை காதலித்தார். இந்தச் சூழலில் அவர் குறித்து சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன.

இந்தியாவின் சிறந்த நடன அமைப்பாளர் பிரபுதேவாவின் கோரியோகிராஃபியயில் அனைத்து நடிகர்களுமே சிறப்பான நடனத்தை வெளிப்படுத்துவார்கள். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைத்தார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மீனா; இருப்பதிலேயே ரொம்பவும் கடினமான கோரியகிராஃபர் என்றால் அது பிரபுதேவாதான் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. நடன அமைப்பாளராக மட்டுமின்றி பிரபுதேவா நடிகராகவும் புகழ் பெற்றவர். காதலன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரபுதேவா தொடர்ந்து ராசைய்யா, விஐபி, மின்சாரக்கனவு, டைம் என ஏராளமான படங்கள் நடித்தார்.

Prabhu Deva Nayanthara GOAT

காதல் கொண்டேன்: அந்தப் படங்களும் ஹிட்டாகின. இதனால் 90களில் முன்னணி நடிகர்கள் வரிசையில் பிரபுதேவா இருந்தார். மேலும் காதல் கொண்டேன் படத்துக்கு ஹீரோவாக நடிக்க முதலில் செல்வராகவன் பிரபுதேவாவைத்தான் அணுகினார் என்பது நினைவுக்கூரத்தக்கது. பிரபுதேவா கடைசியாக பகீரா படத்தில் நடித்திருந்தார். படம் படுதோல்வியை சந்தித்தது.

டைரக்டர் பிரபுதேவா: நடிகர், நடன அமைப்பாளராக கலக்கிவந்த பிரபுதேவா 2005ஆம் ஆண்டு இயக்குநராகவும் அறிமுகமானார். அவர் தெலுங்கில் இயக்கிய முதல் படம்தான் தமிழில் சம்திங் சம்திங் படமாக ரீமேக்காகியது. அதனையடுத்து தமிழில் போக்கிரி, வில்லு, வெடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் ஹிந்தியில் வாண்டட் (போக்கிரி ரீமேக்), ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா, தபாங் 3 உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

சர்ச்சைகள்: பிரபுதேவாவை சுற்றி சர்ச்சைகளும் வட்டமடித்தன. தன்னுடன் நடனம் ஆடிய ரமலத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதற்கிடையே நயன்தாராவை காதலித்தார். பிரபுதேவாவுக்காக நயன் மதம் மாறவும் செய்தார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை இருவரின் காதலும் பிரேக் அப்பில் முடிந்தது. இதனையடுத்து அவர் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அண்மையில் ஒரு பெண் குழந்தை இருக்கிறார்.

பிரபு போட்ட கண்டிஷன்கள்: இந்நிலையில் பிரபுதேவா குறித்து சில தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவிவருகின்றன. அதாவது அவர் நயன்தாராவை காதலித்தபோது, 'இனி சினிமாவில் நடிக்கக்கூடாது, நமக்கு திருமணம் ஆனாலும் எனது முதல் மனைவியுடன் டச்சில்தான் இருப்பேன்' என ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டதாகவும்; அதன் காரணமாகத்தான் இருவரது காதலும் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்தத் தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X