அம்பியா இருக்க பிரபுதேவா திடீர்னு அந்நியனா மாறுறாரே.. மிரட்டும் பஹீரா ’சைக்கோ ராஜா’ பாட்டு!

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள பஹீரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.

திரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக பிரபுதேவாவை வைத்து சிகப்பு ரோஜா, மன்மதன் பாணியில் ஒரு சைக்கோ படத்தை இயக்கி வருகிறார்.

அந்த படத்தில் இடம்பெற்றுள்ள சைக்கோ ராஜா பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி மிரட்டி வருகிறது.

பஹீரா இயக்குநர்

பஹீரா இயக்குநர்

ஜிவி பிரகாஷின் திரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தை அடல்ட் ஒன்லி படமாக இயக்கி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இந்த பஹீரா படத்தை இயக்கி உள்ளார். சிம்புவின் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன்.

சைக்கோ ராஜா

நடிகர் பிரபுதேவாவை சைக்கோ கொலைகாரனாக மாற்றி இந்த பஹீரா படத்தை இயக்கி உள்ளார். தற்போது அந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான சைக்கோ ராஜா பாடல் வெளியாகி மிரட்டி வருகிறது. பஹீரா முரளிதரன் எனும் கதாபாத்திரத்தில் மருத்துவராக, வக்கீலாக, சைக்கோ ராஜாவாக ஏகப்பட்ட கெட்டப்புகளில் இந்த படத்தில் பிரபுதேவா நடித்துள்ளார்.

அம்பி டு அந்நியன்

அம்பி டு அந்நியன்

இசைக் கச்சேரி ஒன்றில் நடிகை ரம்யா நம்பீசனுக்கும் பிரபுதேவாவுக்கும் போட்டி பாடல் போல ஆரம்பிக்கும் இந்த பாடலின் துவக்கத்தில் அம்பி போல குடுமியெல்லாம் போட்டுக் கொண்டு இருக்கும் பிரபுதேவா இடையே இன்டெர்வெல் எடுத்துக் கொண்டு சரக்கடித்து விட்டு அந்நியனாக மாறி சைக்கோ ராஜாவாக அலற விடுகிறார்.

ஜிவி பிரகாஷ்

ஜிவி பிரகாஷ்

திரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தில் நடித்த ஜிவி பிரகாஷ் இந்த சைக்கோ ராஜா பாடலை படு வெறித்தனமாக பாடிக் கொடுத்திருக்கிறார். லிரிக் வீடியோவில் அவரது எக்ஸ்பிரஷன்கள் செம மிரட்டலாக உள்ளது. ஜிவியுடன் இணைந்து பிரபல தெலுங்கு பாடகி மாங்ளி, சுசித்ரா பாலசுப்பிரமணியம் மற்றும் பரத் நாராயணன் உள்ளிட்டோர் பாடியுள்ளனர். இசையமைப்பாளர் கணேசன் சேகர் இசையில் உருவாகி உள்ள இந்த பாடலை பா. விஜய் எழுதி உள்ளார்.

எக்கச்சக்க ஹீரோயின்கள்

எக்கச்சக்க ஹீரோயின்கள்

சோனியா அகர்வால், அமைரா தஸ்துர், ஜனனி அய்யர், சஞ்சிதா ஷெட்டி, சாக்‌ஷி அகர்வால், ரம்யா நம்பீசன், காயத்ரி என மொத்தம் 7 ஹீரோயின்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். அத்தனை ஹீரோயின்களையும் மொட்டை தல மூணு கண்ணன் பஹீரா என்ன செய்யப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X