Prabhu Deva: முதல் மனைவியை பிரிய இதுதான் காரணமா..? நயன்தாராவுக்கும் துரோகம் செய்த பிரபுதேவா!

சென்னை: இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் பிரபுதேவா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா ஸ்டாராக டான்ஸ் கோரியோகிராபியில் கலக்கி வருகிறார்.

அதேபோல், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்ற இமேஜும் பிரபுதேவாவுக்கு உள்ளது.

ஆனால், சொந்த வாழ்வில் பல சர்ச்சைகளை சந்தித்த பிரபுதேவா, தனது முதல் மனைவியையும் நயன்தாராவையும் ஏன் பிரிந்தார் என தற்போது தெரியவந்துள்ளது.

 Prabhu Devas breakup reason with his first wife and Nayanthara

பிரபுதேவாவால் நொந்துபோன நயன்தாரா:திரையுலகில் முன்னணி டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவர் சுந்தரம். அவரது மகனாக திரையுலகில் அறிமுகமான பிரபுதேவா சர்வதேச அளவில் பிரபலமாகிவிட்டார். டான்ஸர், டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என திரையுலகில் கொடிகட்டி பறக்கிறார். இவருக்கு சென்னை, ஹைதராபாத், மும்பை என பல நகரங்களில் பல கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளன.

அதேநேரம், தனது சொந்த வாழ்க்கையை பல சர்ச்சைகளுடன் வாழ்ந்து வருகிறார். பிரபுதேவா டான்ஸ் மாஸ்டராக பல படங்களில் பிஸியாக இருந்தபோது, அவரது குரூப்பில் டான்ஸ் ஆடி வந்த ரமலத் என்பவரை காதலித்தார். முஸ்லிம் பெண்ணான குரூப் டான்ஸரை ரமலத்தை பிரபுதேவா காதலித்தது தெரிந்ததும், சுந்தரம் மாஸ்டர் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஆனாலும் காதலில் உறுதியாக இருந்த பிரபுதேவா, ரமலத்தை ரகசியமாக திருமணம் செய்துகொண்டாராம்.

இதனால், பிரபுதேவாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் இடையே பல நாட்களாக பிரச்சினை நடந்துள்ளது. ஆனாலும் காதல் மனைவியை கைவிடமால் அவருடன் மூன்று குழந்தைகள் பெற்றுள்ளார் பிரபுதேவா. ஒருகட்டத்தில் ரமலத்தை முஸ்லிம் மதத்தில் இருந்து இந்துவாக மாற்றிவிடு என பிரபுதேவாவுக்கு அவரது குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்நேரத்தில் பிரபுதேவாவின் மகன் ஒருவரும் இறந்துவிட அவர் ரொம்பவும் விரக்தியாகியுள்ளார்.

 Prabhu Devas breakup reason with his first wife and Nayanthara

அப்போதுதான் பிரபுதேவாவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே லேசாக மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் அதேநேரத்தில் தான் விஜய்யின் வில்லு படத்தை இயக்கினார் பிரபுதேவா. அதில் விஜய் ஜோடியாக நடித்த நயன்தாராவுடன் பிரபுதேவாவுக்கு காதல் ஏற்பட, இருவரும் ஒன்றாகவே நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தொடங்கினர். நயன்தாராவும் பிரபுதேவாவின் பெயரை கையில் டாட்டூவாக வரைந்தார்.

இந்த விவாகரமும் பிரபுதேவா குடும்பத்தில் பல பிரச்சினைகளை கிளப்பியுள்ளது. இதனால் நயன்தாராவின் கேரியரிலும் சிக்கல் ஏற்பட்டது. பிரபுதேவா - நயன் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டனர் எனக் கூறப்பட்ட நிலையில், திடீரென இந்த உறவை பிரேக்கப் செய்தார் பிரபுதேவா. அவரின் இந்த முடிவு நயன்தாராவை ரொம்பவே பாதித்துள்ளது. ஆனால், அதன்பிறகு நயன்தாராவும் பிரபுதேவாவை சுத்தமாக வெறுத்துவிட்டாராம். இந்நிலையில், பிரபுதேவா தற்போது ஹிமானி சிங் உடன் வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X