பிரபு தேவாவின் சைக்கோ மிஸ்டரி த்ரில்லரில் இத்தனை ஹீரோயின்களா? லேட்டஸ்டாக இணைந்த ந.கொ.ப.கா நடிகை!
சென்னை: சைக்கோ மிஸ்டரி த்ரில்லர் படமான 'பஹிரா'வில் 5 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்
Recommended Video
த்ரிஷா இல்லேனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசாராதவன் படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன்.
இவர் அடுத்து இயக்கும் படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்துக்கு 'காதலன் ரிட்டன்ஸ்' என்று முதலில் டைட்டில் வைத்திருந்தனர்.

பர்ஸ்ட் லுக்
பரதன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், படத்துக்கு 'பஹிரா' என டைட்டில் மாற்றப்பட்டிருந்தது. போஸ்டரில் பிரபுதேவா, மொட்டை அடித்து, வித்தியாசமான கண்ணாடி அணிந்து புதுமையானத் தோற்றத்தில் இருந்தார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது.

பிரபுதேவா
இந்நிலையில், படம் பற்றி ஆதிக் ரவிச்சந்திரன் பேசும்போது, ' இந்தப் படத்தின் கதையை எனது நண்பர் ஒளிப்பதிவாளர் அபிநந்தனிடம் சொன்னபோது அவர்தான், இந்தக் கதை பிரபுதேவாவுக்கு செட் ஆகும் என்று சொன்னார். இதையடுத்து, அவரிடம் கதையை சொன்னேன். பிடித்திருந்தது. பிறகு கால்ஷீட் கொடுத்தார். இந்தப் படம், நிச்சயமாக அவரை வேறு கோணத்தில் காட்டும்.

கருஞ்சிறுத்தை
இது சைக்கோ மிஸ்டரி திரில்லர் படம். பல ஆச்சரியங்களும் ட்விஸ்டும் படத்தில் இருக்கும். இந்தப் படத்தின் கதை 'ஜங்கிள் புக்' காமிக்ஸ் கதையில் வரும் கருஞ்சிறுத்தையின் பெயர்தான் பஹிரா. அதைதான் படத்துக்கு டைட்டிலாக வைத்துள்ளோம். பிரபுதேவா கேரக்டர், ரசிகர்களுக்கு புதிதாக இருக்கும் என்று கூறி இருந்தார்.

அமைரா தஸ்துர்
இதில், நடிகர் பிரபுதேவா ஜோடியாக, 5 பேர் நடிக்கின்றனர். 'அனேகன்' படத்தில் நடித்த அமைரா தஸ்துர் ஒரு ஹீரோயினாக நடிக்கிறார். மற்றொரு ஹீரோயினாக காயத்ரி சமீபத்தில் இணைந்துள்ளார். இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், புரியாத புதிர் உட்பட சில படங்களில் நடித்தவர். மேலும் மூன்று புதுமுகங்கள் ஹீரோயினாக நடிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











