பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல்...எதுல ரிலீஸ் தெரியுமா ?
சென்னை : பிரபுதேவா அடுத்து நடித்துள்ள படங்களில் ஒன்று பொன் மாணிக்கவேல். ஏ.சி.முகில் செல்லப்பன் இயக்கி உள்ள இந்த படத்தை நெமிசந்த் ஜாபக் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் நிவேதா பேதுராஜ், ஜெ.மகேந்திரன், சுரேஷ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். தேவி 2 படத்திற்கு பிறகு பிரபுதேவா, கோலிவுட்டில் நடித்துள்ள படம் இது.
பிரபுதேவா தமிழில் முதல் முறையாக போலீஸ் கெட்அப்பில் நடித்துள்ள படம் இது. இந்த படத்திற்கு கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஆனால் கொரோனா நோய் தொற்று காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. ஆனால் தொடர்ந்து தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், நீண்ட நாட்களாக இந்த படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது.
லேட்டஸ்ட் தகவலின்படி, இந்த படம் புகழ்பெற்ற ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ் செய்யவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











