பிரபுதேவா படத் தலைப்பு 'பொன் மாணிக்கவேல்': இன்னொரு தீரன் அதிகாரம் ஒன்றா?
Recommended Video

சென்னை: பிரபுதேவா போலீஸாக நடிக்கும் படத்திற்கு பொன் மாணிக்கவேல் என்று பெயர் வைத்துள்ளனர்.
பிரபுதேவா தற்போது படங்களில் நடிப்பதில் பிசியாக உள்ளார். இதற்கிடையே சல்மான் கானுடன் சேர்ந்து அமெரிக்கா, கனடாவில் நடந்த தபாங் டூரில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடினார்.

பிரபுதேவா முகில் செல்லப்பன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பிரபுதேவா முதன் முதலாக காக்கிச் சட்டை போட்டுள்ள இந்த படத்திற்கு பொன் மாணிக்கவேல் என்று பெயர் வைத்துள்ளனர்.
பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். படத்திற்கு நேர்மையான போலீஸ் அதிகாரி பொன் மாணிக்கவேலின் பெயர் வைத்திருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட பழமையான சிலைகளை ஐ. ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு வெற்றிகரமாக மீட்டுள்ளது. ஒரு வேளை பிரபுதேவா பொன் மாணிக்கவேலாக தான் நடிக்கிறாரோ அதனால் தான் அவர் பெயரை படத்திற்கு வைத்துள்ளார்களா என்று பேசப்படுகிறது.
கார்த்தியின் தீரன் அதிகாரம் போன்று பொன் மாணிக்கவேல் படக்கதையும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்படுகிறதா?


Click it and Unblock the Notifications











