பிரபு தேவாவோட பொன் மாணிக்கவேலும் ஓடிடியிலதான் ரிலீஸ்... விரைவில் அறிவிப்பு
சென்னை : பிரபுதேவாவின் அடுத்த படமான பொன் மாணிக்கவேல் ரிலீசுக்கு தயாராகவுள்ளது.
கடந்த பொங்கலிலேயே இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிதிப் பிரச்சினைகளால் படத்தின் ரிலீஸ் தள்ளி போயுள்ளது.
இந்நிலையில் படத்தை தற்போது ஓடிடியில் வெளியிட தயாரிப்புக்குழு திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஓடிடியில் வெளியாகும் படங்கள்
கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தியேட்டர்கள் முடங்கியுள்ளன. இதையடுத்து பல படங்கள் நேரிடையாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவையும் பெற்று வருகின்றன. வெளியில் வரமுடியாத நிலையில், இந்த வகையில் வெளியாகும் புதுப்படங்களை பார்ப்பதில் ரசிகர்களும் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறைவான விலை
இந்த வகையில் மிகப்பெரிய படங்கள் அல்லது சிறப்பான ஹீரோக்களின் படங்கள் மட்டுமே ஓடிடியில் வெளியாவதால், சிறந்த படங்களை குறைவான விலையில், குடும்பத்துடன் பார்த்துவிட முடியும். சிலர் வீட்டிலேயே தியேட்டர் அனுபவத்தையும் பெற்று விடுகின்றனர். இதன்மூலம் வெளியில் சென்று படங்களை பார்க்கும் மலைப்பான டாஸ்க்கிலிருந்து நடுத்தர கணவன்மார்கள் தப்பிக்கும் சூழலும் உள்ளது.

பொன் மாணிக்கவேல் ஓடிடி ரிலீஸ்?
ஆனால் தியேட்டர் அனுபவங்களை இத்தகைய ஓடிடி படங்கள் முழுமையாக தர முடியாது என்பதும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மைதான். இந்நிலையில் பிரபுதேவாவின் 50வது படமான பொன் மாணிக்கவேல் படத்தையும் ஓடிடியில் வெளியிட தயாரிப்பு தரப்பு தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

தள்ளிப்போன ரிலீஸ்
பிரபுதேவா போலீஸ்காரராக நடித்துள்ள இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ், மகேந்திரன், சூரி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். டி இமான் மியூசிக் அமைத்துள்ளார். ஏசி முகில் செல்லப்பன் இயக்கியுள்ளார். கடந்த பொங்கலன்றே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் சில நிதி சிக்கல்களால் வெளியாகாமல் போனது.


Click it and Unblock the Notifications











