வயசாகிடுச்சி... இனி எந்தப் பெண்ணுடனும் உறவில்லை! - பிரபு தேவா
சென்னை: எனக்கு வயசாகிவிட்டது. இனி எந்தப் பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்ள விரும்பவில்லை. என் மகன்கள்தான் இனி எல்லாமே, என்று கூறியுள்ளார் பிரபு தேவா.
இந்தியாவின் முன்னணி சினிமா இயக்குநராக உயர்ந்திருக்கும் பிரபு தேவாவின் காதல் கதைகள் நாடறிந்தவை.
ரம்லத் என்பவரை காதலித்து மணந்தார். மூன்று குழந்தைகள் பிறந்தன இருவருக்கும். மூவரில் ஒரு மகன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டான்.

அப்போது ஆறுதல் சொல்ல வந்தார் நடிகை நயன்தாரா. அடுத்த சில மாதங்களில் இருவரும் காதலிப்பதாக செய்திகள். ஒரு நாள் அதை பிரபுதேவாவே ஒரு அறிவிப்பு மூலம் உறுதி செய்தார்.
நயன்தாராவைத் திருமணம் செய்வதற்காக ரம்லத்தை விவாகரத்தே செய்துவிட்டார் பிரபு தேவா. இந்தக் கதை ஒரு ஆண்டு முழுவதும் பரபரப்பாக ஓடியது.
ஒரு நாள் திடீரென கிறித்தவ மதத்திலிருந்து இந்துவாக மாறினார் நயன்தாரா. அடுத்த சில தினங்களில் இருவரும் திருமணம் செய்து கொண்டது போன்ற படங்கள் வெளியாகின.
ஆனால் சில மாதங்களில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்துவிட்டனர். பிரபுதேவா மும்பையில் செட்டிலாகிவிட்டார்.
மகன்களைப் பார்க்க மட்டும் அடிக்கடி சென்னை வந்து போகிறார். இனி தன் வாழ்க்கையை மகன்களுக்காக செலவிடப் போவதாகக் கூறி வருகிறார்.
இனி உங்கள் வாழ்க்கையில் வேறு பெண்ணுக்கு இடமில்லையா.. மனைவியுடன் மீண்டும் சேருவீர்களா என்று கேட்டபோது, "எந்த பெண்ணுடனும் எனக்கு உறவு இல்லை. 2 ஆண்டுகளாகத் தனியாகத்தான் இருக்கிறேன்.
எனக்கு நிறைய வேலைகள் உள்ளன. கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. இதில் பெண்களுடன் சுற்ற ஏது நேரம்?
எனக்கு இப்போது வயதாகி விட்டது. மிக சீக்கிரமே என் மகன்கள் கேர்ள் பிரண்டுகளோடு வரும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது," என்றார்.


Click it and Unblock the Notifications











