தனுஷ் போட்டியில்லை… பொங்கலுக்கு தர்பாருடன் மோதப் போறது இவர்தான்!

Recommended Video

Darbar Motion Poster | Rajinikanth | Subaskaran | A.R. Murugadoss | Anirudh Ravichander | Tamil

சென்னை: பிரபுதேவா முதல்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்துள்ள பொன் மாணிக்கவேல் படம் பொங்கல் 2020ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகிறது.

நடிகர் தனுஷின் பட்டாஸ் படம் பொங்கல் ரேசில் கலந்து கொள்ளவில்லை என்ற தகவலும் கிடைத்துள்ளது. பொங்கல் விடுமுறைக்கு பிறகு குடியரசு தினத்தை பட்டாஸ் குறிவைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தர்பார்

தர்பார்

லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள தர்பார் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 9ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. நீண்ட காலத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த், இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

பொன் மாணிக்கவேல்

பிரபுதேவா முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் பொன் மாணிக்கவேல் படம் இந்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர், ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு, எப்போது ரிலீசாகும் என்றே தெரியாமல் கிடப்பில் போடப்பட்டது. சாந்தனு பாக்யராஜை வைத்து கண்டேன் படத்தை இயக்கிய முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபு தேவா நடித்துள்ள பொன் மாணிக்கவேல் படம் ரிலீஸ் பிரச்சனைகள் தீர்ந்து வரும் பொங்கலுக்கு ஒரு வழியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் போட்டி

போலீஸ் போட்டி

பொங்கலுக்கு வெளியாகும் ரஜினியின் தர்பார் மற்றும் பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய இரு படங்களும் போலீஸ் கதையம்சம் கொண்ட படங்கள் என்பதால், வரும் பொங்கலுக்கு போலீஸ் போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிவேதா பெத்துராஜ்

விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் படத்தில் நாயகியாக நடித்திருந்த நிவேதா பெத்துராஜ் தான் பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். சங்கத்தமிழன் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்காத நிலையில், பொன் மாணிக்கவேல் படமாவது நிவேதாவுக்கு கோலிவுட்டில் வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Read more about: darbar தர்பார்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X