என்னங்க சொல்றீங்க.. பிரபுதேவாவின் பொன்மாணிக்கவேல் ஒடிடியில் ரிலீஸா?!
சென்னை : பிரபுதேவா நடித்துள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.
சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி, மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

போலீஸ் அதிகாரியாக
தேவி, குலேபகாவலி, மெர்க்குறி, சார்லி சாப்ளின் 2 என தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் பிரபு தேவா. தற்போது இவர், உருவாகி இருக்கும் படம் 'பொன் மாணிக்கவேல்'. நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடிக்கிறார்.

இசையமைத்துள்ளார்
இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கேஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆக்ஷன் திரைப்படம்
ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள இத்திரைப்படத்தின் அனைத்துக்கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்து தற்போது படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால், பொன் மாணிக்கவேல் படத்தை ஒடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகல் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இந்த தகவலை படக்குழு உறுதிப்படுத்தவில்லை.

பஹிரா
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா பஹிரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அமிரா தஸ்தூர், காயத்ரி சங்கர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. மேலும், கருப்பு ராஜா வெள்ளை ராஜா, ஊமை விழிகள், விநோதன் ஆகிய படங்களில் பிரபுதேவ நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











