பொன் மாணிக்கவேல் டிரைலர் ரிலீஸ்.. ஆனா இப்பவும் ரிலீஸ் தேதி அறிவிக்கலை.. எப்போதான் ரிலீஸ் ஆகுமோ?
சென்னை: ஏ.சி. முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபுதேவா முதல் முறையாக போலீசாக நடித்துள்ள பொன் மாணிக்கவேல் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
ஆனால், டிரைலரின் முடிவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
பொங்கலுக்கு தர்பார் படத்துடன் போட்டியாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மீண்டும் ஹீரோ
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா தமிழில் ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக பொன் மாணிக்கவேல் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

சல்மான் கான்
ஹீரோவாக பெரிதாக ஷைன் ஆகவில்லை என்றாலும், இயக்குநராக பாலிவுட்டில் கலக்கி வருகிறார் பிரபுதேவா. சல்மான் கான் நடிப்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியான தபங் 3 படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் ராதே படத்தில் சல்மான் கான் நடித்து வருகிறார்.

ரொம்ப லேட்
கடந்த ஆண்டு மத்தியிலேயே பொன் மாணிக்கவேல் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. மீண்டும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. மறுபடியும் ரிலீஸ் தேதி அறிவிக்காமல் படம் தள்ளிப் போனது.

முதல் முறை
விஜய்யின் போக்கிரி, சல்மான் கானின் தபங் 3 என போலீஸ் படங்களை இயக்கியுள்ள பிரபுதேவா முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் படம் தான் பொன் மாணிக்கவேல்.
டிரைலர் ரிலீஸ்
ஏ.சி. முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் இமான் இசையில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் படத்தின் அதிரடியான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றம்
ஆனால், அந்த டிரைலரின் முடிவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த பிரபுதேவாவின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. படம் விரைவில் ரிலீசாகும் என்ற அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











