அடேங்கப்பா.. 7 ஹீரோயினா.. மூணு கண்ணனாக மிரட்டும் சைகோ ராஜா பிரபுதேவா.. தெறிக்குது பகீரா டீசர்!
சென்னை: திரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தை இயக்கி பரபரப்பை கிளப்பிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி உள்ள பகீரா படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த டீசரை பார்த்த உடனே, இந்த படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்கிற கேள்வி தான் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதற்கு காரணம் வித்தியாசமான சைக்கோ கில்லராக பிரபுதேவா நடித்துள்ளார். மேலும், 7 ஹீரோயின்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ஆதிக் ரவிச்சந்திரன்
ஜிவி பிரகாஷின் திரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தை அடல்ட் ஒன்லி படமாக இயக்கி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இந்த பகீரா படத்தை இயக்கி உள்ளார். சிம்புவின் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
சைக்கோ ராஜா
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் நடிகர் பிரபுதேவாவை சைக்கோ கொலைகாரனாக மாற்றி இந்த பகீரா படத்தை இயக்கி உள்ளார். தற்போது அந்த படத்தின் டீசர் வெளியாகி கோலிவுட் ரசிகர்களை மிரட்டி வருகிறது. பகீரா முரளிதரன் எனும் கதாபாத்திரத்தில் மருத்துவராக, வக்கீலாக, சைக்கோ ராஜாவாக ஏகப்பட்ட அவதாரங்களை பிரபுதேவா எடுத்துள்ளார்.

7 ஹீரோயின்கள்
பூனைகளை கொல்லுவீங்களா என சோனியா அகர்வால் கேட்க ஆரம்பிக்கும் ஹீரோயின் பட்டியல், அமைரா தஸ்துர், ஜனனி அய்யர், சஞ்சிதா ஷெட்டி, சாக்ஷி அகர்வால், ரம்யா நம்பீசன், காயத்ரி என ஒரு பெரிய லிஸ்டே நீள்கிறது. அத்தனை ஹீரோயின்களையும் இந்த சின்ன டீசரில் கச்சிதமாக காட்டி பயமுறுத்தி உள்ளார் இயக்குநர்.

மூணு கண்ணா வாரான்
சிகப்பு ரோஜாக்கள், மன்மதன், ராட்சசன் படங்களை போலவே சைக்கோ த்ரில்லராக உருவாகி உள்ள பகீரா படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிரட்டும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மீசை இல்லாமல் மொட்டை அடித்து மூன்று கிளாஸ் இருக்கும் கண்ணாடியை அணிந்து கொண்டு மூணு கண்ணா வரான் என குழந்தைகளை மிரட்டுவது போல பிரபுதேவா மிரட்டுகிறார்.

தனுஷ் ரிலீஸ்
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி உள்ள பகீரா படத்தின் டீசரை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். தி கிரே மேன் படத்தின் ஷூட்டிங்கிற்காக ஹாலிவுட் சென்றுள்ள தனுஷ், இந்த டீசரை வெளியிட்ட நிலையில், தனுஷ் ரசிகர்கள் இதனை டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











