பாலிவுட்டில் படு ப்ளாப்பான பிரபு தேவா படம்... திட்டித் தீர்க்கும் விமர்சகர்கள்!

By Shankar

இந்த ஆண்டின் படு மோசமான படம், இதெல்லாம் ஒரு படமா..., இது படமல்ல - பெரும் தலைவலி..., இதுக்கு மார்க்கே கிடையாது... வேணும்னா ஜீரோ போட்டுக்கலாம், இப்படியெல்லாம் விமர்சனங்களைச் சம்பாதித்துள்ளது பிரபு தேவா இயக்கத்தில் நேற்று வெளியான ஆர் ராஜ்குமார்.

ஷாகித் கபூர், சோனாக்ஷி சின்ஹா நடிக்க, பிரபு தேவா இயக்கியுள்ள படம் ஆர் ராஜ்குமார்.

நேற்று உலகமெங்கும் வெளியான இந்தப் படத்துக்கு, கடுமையான விமர்சனங்கள் வந்துள்ளன.

இந்தப் படத்தை கடவுள் கூட காப்பாற்ற முடியாது என கூறியுள்ள ஒன்இந்தியா, ஒன்றரை ஸ்டார்கள் தந்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரசோ, 2013-ம் ஆண்டின் படுமோசமான திரைப்படம் என்றால் அது ஆர் ராஜ்குமார்தான் என்று காய்ச்சியுள்ளதோடு, ஜீரோ மதிப்பெண்களை வழங்கியுள்ளது.

உங்களை உங்களுக்கே பிடிக்கவில்லை என்றால் மட்டுமே இந்த மாதிரி படங்களைப் பார்க்க முடியும். வேஸ்ட் படம், என திட்டியுள்ளது ஜீ நியூஸ்.

பாலிவுட்டின் மிகப்பெரிய ப்ளன்டர் ஆர் ராஜ்குமார் என குறிப்பிட்டுள்ளது இந்துஸ்தான் டைம்ஸ்.

Prabhu Deva's R Rajkumar becomes big flop

என்டிடிவி இந்தப் படத்துக்கு கடுமையான விமர்சனத்தைத் தந்துள்ளதோடு, ஒரு ஸ்டார் மட்டுமே வழங்கியுள்ளது.

சமீப நாட்களில் ஒட்டு மொத்த மீடியாவும் கூட்டாக கண்ட மேனிக்குத் திட்டியுள்ள படம் என்றால் அது அநேகமாக ஆர் ராஜ்குமாராகத்தான் இருக்கும்.

அவ்வளவு மோசமாவா இருக்கு?!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X