அடேங்கப்பா, பிரபுதேவா மகனா இது?
சென்னை: பிரபுதேவாவின் மகன் வீடியோவை பார்த்தவர்கள் அடேங்கப்பா பெரிதாக வளர்ந்துவிட்டாரே என்கிறார்கள்.
நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் என்று பன்முகம் கொண்ட பிரபுதேவாவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவாவுக்கு இந்த உயரிய விருது கிடைத்ததற்கு பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது மிகப் பெரிய கவுரவம் என்கிறார் பிரபுதேவா. மேலும் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரபுதேவாவின் மகன் தன் அப்பாவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததில் ஜாலி என்று கூறும் வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது.
பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் 2 படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக அவர் சல்மான் கானை வைத்து தபாங் 3 படத்தை இயக்க உள்ளார். படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











