வெளியானது தேள் படத்தின் ட்ரெயிலர்... ஜிவி பிரகாஷ் வெளியீடு
சென்னை : நடிகர் பிரபுதேவா நடிப்பில் ஹரிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தேள்.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் மிரட்டலான ட்ரெயிலர் இன்றைய தினம் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரபுதேவா
நடிகர் பிரபுதேவா இயக்கம், நடிப்பு, நடனம், தயாரிப்பு என பன்முகத் திறமையை இந்திய அளவில் வெளிப்படுத்தி வருகிறார். பாலிவுட்டில் மட்டுமின்றி கோலிவுட்டிலும் சிறப்பான படங்களை இயக்கியுள்ளார். அவை வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன.

அடுத்தடுத்த படங்கள்
இந்நிலையில் தற்போது கோலிவுட்டில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில், தேவி, படம் இரண்டு பாகங்களாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து குலேபகாவலி உள்ளிட்ட படங்களில் நடித்து தன்னுடைய ரசிகர்களை மீண்டும் பரவசப்படுத்தி வருகிறார்.

பொன் மாணிக்கவேல் படம்
இந்நிலையில் இவரது நடிப்பில் பொன் மாணிக்கவேல் நாளைய தினம் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இதில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் பிரபு தேவா. படத்தின் ட்ரெயிலர், பாடல் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பையும் எதிர்பார்ப்பைவும் உண்டு செய்துள்ளது.

மிரட்டலான பஹீரா படம்
தொடர்ந்து பஹீரா இவரது நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதில் சைக்கோ கில்லராக நடித்துள்ளார். இந்த படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஹரிக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள தேள் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது.

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகளையும் தயாரிப்பு தரப்பு முடுக்கி விட்டுள்ளது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

ட்ரெயிலர் ரிலீஸ்
கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக ரிலீசுக்காக காத்திருந்த இந்தப் படம் தற்போது ரிலீசாக உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு படத்தின் ஆடியோ வெளியாகியுள்ள நிலையில் இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த ட்ரெயிலரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மிரட்டலான ட்ரெயிலர்
மிகவும் மிரட்டலான வகையில் இந்த ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு சி சத்யா இசையமைத்துள்ள நிலையில் படத்தின் பின்னணியும் சிறப்பாக அமைந்துள்ளது இந்த ட்ரெயிலர் மூலம் தெரியவருகிறது. படத்தில் தன்னுடைய உடலை சிறப்பாக ஏற்றியுள்ளார் பிரபுதேவா.


Click it and Unblock the Notifications











