Prabhu Deva - ஒரே ஃபோன் கால்தான்.. விஜய் உடனே ஒத்துக்கிட்டாரு.. பிரபுதேவா பகிர்ந்த சீக்ரெட்

சென்னை: Prabhu Deva (பிரபுதேவா) ஒரு ஃபோன் கால்தான் செய்தேன் உடனே விஜய் ஒரு விஷயத்துக்கு ஒத்துக்கொண்டார் என்று பிரபுதேவா தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் சிறந்த :நடன அமைப்பாளராக மட்டுமின்றி பிரபுதேவா நடிகராகவும் புகழ் பெற்றவர். காதலன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரபுதேவா தொடர்ந்து ராசைய்யா, விஐபி, மின்சாரக்கனவு, டைம் என ஏராளமான படங்கள் நடித்தார். அந்தப் படங்களும் ஹிட்டாகின. இதனால் 90களில் முன்னணி நடிகர்கள் வரிசையில் பிரபுதேவா இருந்தார். மேலும் காதல் கொண்டேன் படத்துக்கு ஹீரோவாக நடிக்க முதலில் செல்வராகவன் பிரபுதேவாவைத்தான் அணுகினார் என்பது நினைவுக்கூரத்தக்கது. பிரபுதேவா கடைசியாக பகீரா படத்தில் நடித்திருந்தார். படம் படுதோல்வியை சந்தித்தது.

Prabhu Deva said that after just one phone call Vijay agreed to Dance in Rowdy Rathore Movie

டைரக்டர் பிரபுதேவா: நடிகர், நடன அமைப்பாளராக கலக்கிவந்த பிரபுதேவா 2005ஆம் ஆண்டு இயக்குநராகவும் அறிமுகமானார். அவர் தெலுங்கில் இயக்கிய முதல் படம்தான் தமிழில் சம்திங் சம்திங் படமாக ரீமேக்காகியது. அதனையடுத்து தமிழில் போக்கிரி, வில்லு, வெடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் ஹிந்தியில் வாண்டட் (போக்கிரி ரீமேக்), ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா, தபாங் 3 உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

சர்ச்சைகள்: பிரபுதேவாவை சுற்றி சர்ச்சைகளும் வட்டமடித்தன. தன்னுடன் நடனம் ஆடிய ரமலத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதற்கிடையே நயன்தாராவை காதலித்தார். அந்தக் காதல் முறிந்துபோக தற்போது இன்னொரு பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். சமீபத்தில்தான் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

ரவுடி ரத்தோர் நடனம்: இந்நிலையில் பிரபுதேவா இயக்கியிருந்த ரவுடி ரத்தோர் படத்தில் விஜய் எப்படி நடனம் ஒத்துக்கொண்டார் என்ற சீக்ரெட் வெளியாகியிருக்கிறது. பிரபுதேவா அளித்த பேட்டி ஒன்றில், "ரவுடி ரத்தோர் ஷூட்டிங் மும்பையில் போய்க்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ஒரு தமிழ் படத்தின் ஷூட்டிங்கிற்காக விஜய்யும் அங்கு வந்திருந்தார்.

இதனை கேள்விப்பட்ட நான் அவருக்கு ஒரு ஃபோன் செய்து அக்‌ஷய் குமாருடன் ஒரு படம் பண்ணுகிறேன். பாடல் ஷூட் போய்க்கொண்டிருக்கிறது. நீங்கள் வாங்களேன் ஜாலியாக ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்து நடனம் ஆடுங்களேன் என கேட்டேன். எதையும் யோசிக்காத அவர் உடனே வரேன் என்று சொல்லி வந்து நடனம் ஆடினார். இந்தியாவிலேயே டாப் ஆர்ட்டிஸ்ட் அவர் எப்படி ஒரே ஃபோன் காலில் ஒத்துக்கொண்டார் என்று இப்போது யோசித்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்றார்.

இதற்கிடையே வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார் பிரபுதேவா. சமீபத்தில் அவர், விஜய், பிரசாந்த், அஜ்மல் ஆகியோர் இணைந்து நடனம் ஆடிய பாடல் ஒன்று படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X