என்னது அந்த படமா?.. விஜய்க்கு அதெல்லாம் செட் ஆகாதுங்க - அசால்ட்டாக டீல் செய்த பிரபுதேவா
சென்னை: நடிகர் விஜய்க்கு ஒரு விஷயம் மட்டும் செட் ஆகாது என நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா பேசியிருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
இந்திய அளவில் பிரபலமான நடன அமைப்பாளர் என்ற பெயர் எடுத்தவர் பிரபுதேவா. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களாக புகழப்படும் பிரபுதேவாவின் நடனத்திற்கு ஒட்டுமொத்த இந்திய திரை ரசிகர்களும் அடிமை. அவரது நடனத்தை பார்த்து பலரும் இன்றுவரை பிரமக்கின்றனர்.

சுந்தரம் மாஸ்டரின் மகன் பிரபுதேவா
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடன இயக்குநராக இருந்த சுந்தரம் மாஸ்டரின் இரண்டாவது மகன் பிரபுதேவா. முதல் மகனான ராஜுசுந்தரம், கடைசி மகனான நாகேந்திர பிரசாத் ஆகியோரும் நடன அமைப்பாளர்கள் ஆவர். மௌனராகம் படத்தில் இடம்பெற்றிருக்கும் பனி விழும் இரவு பாடல், அக்னி நட்சத்திரத்தில் இடம்பெற்றிருக்கும் ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடலில் டான்ஸராக பணியாற்றியவர் தொடர்ந்து கோரியோகிராஃபியும் செய்ய ஆரம்பித்தார்.

பிரபுதேவாவின் அட்டகாசமான கோரியோகிராஃபி
பிரபுதேவா நடன அமைப்பாளராக பணியாற்றும்போது அனைத்து நடிகர்களுமே சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தினர். ஏன் நடனத்தில் கிண்டலிக்கப்பட்ட விஜயகாந்த்கூட பிரபுதேவா நடன அமைப்பில் அட்டகாசமாக ஆடியிருப்பார். அதேபோல் அவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கலுக்கு நடனம் அமைத்தார்.

நடிகராக கலக்கிய பிரபுதேவா
நடன அமைப்பாளராக மட்டுமின்றி பிரபுதேவா நடிகராகவும் புகழ் பெற்றவர். காதலன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரபுதேவா தொடர்ந்து ராசைய்யா, விஐபி, மின்சாரக்கனவு, டைம் என ஏராளமான படங்கள் நடித்தார். அந்தப் படங்களும் ஹிட்டாகின. இதனால் 90களில் முன்னணி நடிகர்கள் வரிசையில் பிரபுதேவா இருந்தார். மேலும் காதல் கொண்டேன் படத்துக்கு ஹீரோவாக நடிக்க முதலில் செல்வராகவன் பிரபுதேவாவைத்தான் அணுகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநராகவும் ஜொலித்த பிரபுதேவா
நடிகர், நடன அமைப்பாளராக கலக்கிவந்த பிரபுதேவா 2005ஆம் ஆண்டு இயக்குநராகவும் அறிமுகமாகினார். அவர் தெலுங்கில் இயக்கிய முதல் படம்தான் தமிழில் சம்திங் சம்திங் படமாக ரீமேக்காகியது. அதனையடுத்து தமிழில் போக்கிரி, வில்லு, வெடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் ஹிந்தியில் வாண்டட் (போக்கிரி ரீமேக்), ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா, தபாங் 3 உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

பிரபுதேவாவின் பயோபிக்
இந்நிலையில் நடிகர் பிரபுதேவாவிடம் உங்களது பயோபிக் எடுக்கப்பட்டால் அதில் விஜய், அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு மூன்று பேரில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரபுதேவா, "இவங்க மூனு பேருமே செட் ஆகமாட்டாங்க. அவங்களுக்கு தனியா ஒரு ஸ்டைல் இருக்கு. முதலில் என் பயோபிக் நடக்குதான்னு பார்ப்போம்" என குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











