ஆத்தாடி... இன்னும் அதே 'முக்காபுலா' எனர்ஜி... பிரபுதேவாவை வியக்கும் டைரக்டர்!
சென்னை: 25 வருடத்துக்குப் பிறகும் அதே எனர்ஜியுடன் முக்காலா முக்காப்புலா பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடியுள்ளார் என்று இயக்குனர் ரெமோ டிசோசா தெரிவித்தார்.
ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடித்த படம், காதலன். ஹீரோயினாக நக்மா நடித்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்த இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாயின. அதில் ஒன்று, முக்காலா முக்காபுலா.
மெகா ஹிட்டான இந்த பாடல் காட்சியில் பிரபுதேவா ஆடிய நடனம் பிரபலமானது. தமிழில் வெளியான இந்தப் படம் இந்தியில், ஹம்சே ஹே முக்காபுலா என்ற பெயரில் ரிலீஸ் ஆனது.

ஸ்ட்ரீட் டான்சர் 3டி
இதையடுத்து இந்தியிலும் பிரபுதேவா பிரபலமானார். இந்தப் படம் 1994 ஆம் ஆண்டு வெளியானது. தற்போது சல்மான் கான் நடித்துள்ள தபாங் 3 படத்தை இயக்கியுள்ள பிரபுதேவா, அடுத்து 'ஸ்ட்ரீட் டான்சர் 3டி' என்ற டான்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ரத்தா கபூர்
இதை நடன இயக்குனர் ரெமோ டிசோசா இயக்குகிறார். இதில் வருண் தாவன், ஸ்ரத்தா கபூர் ஜோடியாக நடிக்கின்றனர். நோரா, புனித் பதக், தர்மேஷ், முரளி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர். சச்சின் ஜிகார் இசை அமைத்துள்ளர்.

டிரைலரில் முக்காபுலா
சமீபத்தில் இதன் டிரைலர் வெளியானது. இதில் பிரபுதேவாவின் முக்காலா முக்காபுலா பாடல் அப்படியே இடம் பெற்றுள்ளது. அந்தப் பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடிய காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

பிரபுதேவாவுக்கு கவுரவம்
இதுபற்றி இயக்குனர் ரெமோ டிசோசா கூறும்போது, பிரபுதேவாவை கவுரவிக்கும் விதமாக, என்ன செய்யலாம் என யோசித்தோம். அப்போது, அவர் பாடலான முக்காலா முக்காபுலாவின் உரிமை தன்னிடம் இருப்பதாகச் சொன்னார் தயாரிப்பாளர் பூஷன்குமார்.

புதிய வெர்சன்
அதையே புதிய வெர்ஷனில் அமைக்கலாம் என முடிவு செய்தோம். அவருக்கு இதைவிட வேறு என்ன செய்துவிட முடியும்? 25 வருடத்துக்கு முன் என்ன எனர்ஜியுடன் அவர் ஆடினாரோ, அதே எனர்ஜியுடன் இதிலும் ஆடியுள்ளார். அவரை இந்தப் பாடலில் நான் ஆடவைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றார். படம் ஜனவரி மாதம் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











