»   »  சேதி தெரியுமா?: பிரபுதேவாவும், தமன்னாவும் காதலிக்கிறார்களாம்!

சேதி தெரியுமா?: பிரபுதேவாவும், தமன்னாவும் காதலிக்கிறார்களாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமன்னாவும், பிரபுதேவாவும் காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்துள்ள தேவி படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இன்று ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தில் தமன்னா பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

புகழ்ச்சி

புகழ்ச்சி

பிரபுதேவா எப்படி நடனம் ஆடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் தமன்னா பிரபுதேவாவின் நடனத்தை புகழ்ந்து தள்ளினார். பதிலுக்கு பிரபுதேவா தமன்னா திறமையாக நடனம் ஆடுவதாக கூறினார்.

விளம்பரம்

விளம்பரம்

தமிழ் பட விளம்பர நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகிறார் தமன்னா என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் தேவி படத்தை மட்டும் அவர் பிரபுதேவாவுடன் சேர்ந்து நன்றாக விளம்பரம் செய்துள்ளார்.

காதல்

காதல்

பிரபுதேவாவும், தமன்னாவும் காதலிப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. அவர்கள் காதலர்கள் தான் என தெலுங்கு பட இயக்குனர் ஒருவர் உறுதிபடத் தெரிவித்துள்ளாராம்.

திருமணம்

திருமணம்

பிரபுதேவாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது குடும்பத்தாரும், நண்பர்களும் வலியுறுத்தி வருகிறார்கள். தமன்னா யாரையும் காதலிப்பதாக இதுவரை கிசுகிசு கூட வந்தது இல்லை. இந்நிலையில் தான் அவர் பிரபுதேவாவை காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

English summary
Buzz is that Prabhu Deva and Tamanna have fallen in love while acting in trilingual movie Devi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil