கடம்பன் இயக்குனருடன் கைகோர்க்கும் பிரபுதேவா!

சென்னை : கடம்பன் இயக்குனர் அடுத்து இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபுதேவா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பிரபுதேவாவின் 50-வது திரைப்படமான பொன் மாணிக்கவேல் சென்ற ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

பஹிரா, மங் சங்,தேள் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் பிரபுதேவா இப்பொழுது கடம்பன் பட இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் ஃபேன்டசி கதையில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்க அதன் படப்பிடிப்பு பூஜை நேற்று நடைபெற்றுள்ளது.

வசூல் நம்பர் 1

வசூல் நம்பர் 1

தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் கலக்கி வரும் பிரபுதேவா இயக்குனர், நடிகர், நடன இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்டுள்ளார். தமிழில் போக்கிரி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான பிரபு தேவா அதே திரைப்படத்தை இந்தியில் வாண்டட் என்ற பெயரில் ரீமேக் செய்து அதில் சல்மான் கான் நடிக்க வசூல் நம்பர் 1 இல் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்டு மெகா ஹிட் வெற்றி பெற்றது.

ஓரிரு மாதங்களில் திரையில்

ஓரிரு மாதங்களில் திரையில்

வாண்டட் படத்தைத் தொடர்ந்து தபங்க் 3, ரவுடி ராத்தோர், ஆக்சன் ஜாக்சன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி பாலிவுட்டிலும் பிரபலமாக இருக்கும் பிரபுதேவா இப்போது மீண்டும் சல்மான் கான் நடித்திருக்கும் ராதே திரைப்படத்தை இயக்க,படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து இன்னும் ஓரிரு மாதங்களில் திரையில் வெளியாக தயாராக உள்ளது. தொடர்ந்து சல்மான்கானுடன் இணைந்து பணியாற்றி வரும் பிரபுதேவாவுக்கு இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடம்பன் இயக்குனர் ராகவன்

கடம்பன் இயக்குனர் ராகவன்

இதற்கிடையில் தமிழ்சினிமாவில் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் பிரபுதேவா பஹிரா, எங் மங் சங்,தேள் ஆகிய திரைப்படங்களில் ஏற்கனவே நடித்த வர இப்பொழுது கடம்பன் இயக்குனர் ராகவன் உடன் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். குழந்தைகளை மையமாகக் கொண்டு ஃபேன்டசி திரைப்படமாக உருவாகும் இந்த திரைப்படத்தை ரமேஷ் பி பிள்ளை.

கதாநாயகியாக ஒப்பந்தம்

கதாநாயகியாக ஒப்பந்தம்

குள்ளநரி கூட்டம், சேதுபதி, பீட்சா உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்த நடிகையும் பாடகியுமான ரம்யா நம்பீசன் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்க நேற்று இதன் பட பூஜை சென்னையில் நடைபெற்றுள்ளது. இயக்குனர் ராகவன் ஏற்கனவே மஞ்சப்பை மற்றும் கடம்பன் உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X