உறவுப் பெண்ணுடன் திடீர் காதல்.. நடிகர் பிரபுதேவா 2 வது திருமணமா..? தீயாய் பரவும் தகவல்!

By

சென்னை: நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

டான்ஸ் மாஸ்டராக இருந்து பிறகு ஹீரோவாக உயர்ந்தவர், நடனப்புயல் பிரபு தேவா.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பணியாற்றிவரும் அவர், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படுகிறார்.

சார்லி சாப்ளின்

சார்லி சாப்ளின்

இந்து படம் மூலம் நடிகராக அறிமுகமான அவர், தொடர்ந்து காதலன், விஐபி, பெண்ணின் மனதை தொட்டு, டபுள்ஸ், சார்லி சாப்ளின், காதலா காதலா, தேவி 2 உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நடித்திருக்கும் இவர், பல படங்களை இயக்கியுள்ளார்.

எங்கேயும் காதல்

எங்கேயும் காதல்

தமிழில் விஜய் நடித்துள்ள போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி படங்களை இயக்கிய பிரபுதேவா, இந்தியில் சல்மான் கான் நடித்த வான்டட், அக்‌ஷய்குமார் நடித்த ரவுடி ரத்தோர், ஆக்‌ஷன் ஜாக்‌ஷன், தபாங்3 படங்களை இயக்கியுள்ளார். இப்போது சல்மான் கான் நடிக்கும் ராதே படத்தை இயக்கி வருகிறார்.

மலர்ந்தது காதல்

மலர்ந்தது காதல்

இவர், கடந்த 1995 ஆம் ஆண்டு ரம்லத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள். இதில் மூத்த மகன் புற்றுநோய் காரணமாக 2008 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில் விஜய்யின் வில்லு படத்தை இயக்கியபோது, நடிகை நயன்தாராவுடன் அவருக்கு காதல் மலர்ந்தது.

 முறிந்தது காதல்

முறிந்தது காதல்

இதனால், மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார், பிரபுதேவா. இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா. ஆனால், கல்யாணம் வரை சென்ற நயன்தாராவுடனான காதல், பிறகு திடீரென முறிந்தது. 2012-ம் ஆண்டு நயன்தாராவும் பிரபுதேவாவும் பிரிந்து விட்டனர்.

பச்சைக் குத்தினார்

பச்சைக் குத்தினார்

இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இருவரும் காதலிக்கும் போது தனது கையில் பிரபு என்று அவர் பெயரை பச்சைக் குத்தியிருந்தார், நயன்தாரா. பின்னர் அதை, மாற்றிக்கொண்டார். இந்நிலையில் தனது சொந்தக்காரப் பெண்ணை பிரபுதேவா காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

பிரபுதேவா அறிவிப்பார்

பிரபுதேவா அறிவிப்பார்

அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. அந்தப் பெண் டாக்டர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை. இதுபற்றி பிரபுதேவாவே அறிவிப்பார் என்றும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X