பிரபுதேவா எனது கணவர்.. லவ்வர்.. நான் அவருக்கு ராணிதான்.. அதிரடி காட்டிய முதல் மனைவி
சென்னை: இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்படுபவர் பிரபுதேவா. அவரது நடனம் என்றாலே பலரும் கண்கொட்டாமல் பார்த்து ரசிப்பதுண்டு. அவர் முதலில் தன்னுடன் க்ரூப்பில் நடனமாடிய ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மூன்று மகன்கள் இருந்த சூழலில் ஒரு மகன் உடல்நல குறைவால் உயிரிழந்துவிட்டார். சூழல் இப்படி இருக்க முதல் மனைவியை பிரிந்த அவர் அதற்கு பிறகு நயன்தாராவை காதலித்து அவரையும் பிரிந்துவிட்டு; தற்போது ஹிமானி என்பவரை திருமணம் செய்து செட்டிலாகியிருக்கிறார்.
பிரபுதேவாவின் நடனம் என்றாலே இந்தியாவில் இருக்கும் அனைவரும் ரசிப்பார்கள். முதலில் தனது தந்தையின் நடன க்ரூப்பில் டான்ஸராக பயணத்தை தொடங்கிய அவர் அடுத்ததாக நடன இயக்குநராக வளர்ந்தார். அவர் நடனம் அமைக்கும்போது நடனம் ஆட தெரியாத ஹீரோக்கள்கூட அட்டகாசமாக ஆடினார்கள். இதனால் குறுகிய காலத்திலேயே இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். அவரது கோரியோகிராஃபியில் நடனம் ஆடுவதற்கு அனைத்து ஹீரோக்களும் ரொம்பவே விரும்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோ பிரபுதேவா: நடன இயக்குநராக இருந்த பிரபுதேவா திடீரென ஹீரோவாக மாறினார். அதன்படி காதலன், பெண்ணின் மனதை தொட்டு, டைம் என ஏராளமான படங்களில் நடித்தார். 90களில் குறிப்பிடத்தக்க ஹீரோக்களில் ஒருவராக அவர் இருந்தது நினைவுகூரத்தக்கது. நடன இயக்குநர், நடிகர் என இருந்த அவர் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். தெலுங்கில் முதலில் இயக்குநராக அறிமுகமான அவர் அடுத்ததாக தமிழில் விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு படங்களை இயக்கினார். மேலும் விஷாலை வைத்து வெடி, ரவி மோகனை வைத்து எங்கேயும் காதல் படங்களை இயக்கிய அவர் ஹிந்தியிலும் படங்கள் இயக்கியிருக்கிறார்.
திருமண சர்ச்சைகள்: இதற்கிடையே ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு மூன்று மகன்களை பெற்றார். அவர்களில் ஒரு மகன் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அதனையடுத்து ரமலத்தை பிரிந்த அவர்; நயன்தாராவுடன் லிவிங் டூ கெதரில் இருந்தார். அந்த உறவும் பாதியில் முடிந்தது. தொடர்ந்து ஹிமானி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். ஹிமானியுடன் அவர் குடும்பம் நடத்தினாலும் ரமலத் மற்றும் அவருக்கு பிறந்த மகன்களை இன்னமும் பத்திரமாக பார்த்துக்கொள்கிறார். சமீபத்தில்கூட தனது கான்செர்ட்டின் மகனை அறிமுகம் செய்தார்.

ரமலத் பேட்டி: இந்நிலையில் பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் சமீபத்தில் ஒரு தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "பிரபுதேவாவுக்கு நடனம்தான் உயிர். அவர் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்பதில் எல்லோருக்கும் பெருமை என்பதைவிட எனக்கு பெருமை என்பது வேறு விஷயம். அதேசமயம் அதுகுறித்து பெரிய பெருமை எனக்கு இல்லை. ஆனால் அவர் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்; என்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும். அதுதான் எனக்கு மிகப்பெரிய விஷயம்.
அவர்தான் எனது கணவர், லவ்வர்: முக்கியமாக அவர் என்னுடைய கணவர், வீட்டுக்காரர், லவ்வர், எனது பசங்களுக்கு அப்பா என்பதுதான் எனக்கு மிகப்பெரிய விஷயமாக தெரிகிறது. நான் ஏன் வெளியே வரமாட்டேன் என்று கேட்கிறார்கள். நான் ஏன் வெளியே வர வேண்டும். அவர் என்னை ராணி மாதிரிதான் பார்த்துக்கொண்டார். இவங்கள்ட்ட ஏன் பேசுன அவங்கள்ட்ட ஏன் பேசுன என்று ஒன்றுமே அவர் என்னிடம் சொன்னது கிடையாது. பிரபுதேவாவை பார்த்தாலே பலருக்கு பிடித்துப்போய்விடும் அந்த மாதிரியான ஆள்தான் அவர்" என்றார்.


Click it and Unblock the Notifications











