Prabhu Deva - Vadivelu: சிங்கிள்ஸ் கவனத்திற்கு! பிரபு தேவா - வடிவேலுவின் அலப்பறையான காதலர் தின வாழ்த்து

சென்னை: தமிழ் சினிமா உலகம் பல நல்ல நண்பர்களை பார்த்துள்ளது. கடந்த காலங்கள் தொடங்கி நிகழ்காலம் வரையிலும் பல நல்ல நண்பர்கள் தமிழ் சினிமா உலகம் கொண்டுள்ளது. அப்படியானவர்கள் பட்டியலில் இடம் பெறும் மிகவும் தகுதியான நட்பு வட்டம் என்றால் அது நடனப் புயல் பிரபு தேவா மற்றும் வைகைப்புயல் வடிவேலு நட்பைக் கூறலாம்.

இவர்களின் நட்பு என்றுமே ரசிகர்களாலும் தமிழ் திரையுலகாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாகவே ஒன்றாகவே ஊர் சுற்றி வருகிறார்கள். படப்பிடிப்புகளில் கலந்து கொள்கிறார்களா இல்லையா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவ்வப்போது சமூக வலைதளங்களில் அவர்கள் ஜாலியாக அலப்பறை செய்யும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இதைப் பார்த்த பலரும் இவங்க ரெண்டு பேருக்கும் என்ன இளமை திரும்புதா? இந்த காலத்து பசங்க கூட இந்த அளவுக்கு லூட்டி அடிக்க மாட்டாங்க.. ஆனால் இவங்க ரெண்டு பேரும் சேர்ந்துட்டு ஓவர் ஆட்டம் போடுகிறார்களே என்று கமெண்ட் போட்டு வந்தார்கள்.

Prabhu Deva - Vadivelu Valentine s Day Wish With Funny Style Which For Singles

அலப்பறை: சமீபத்தில் கூட இருவரும் காலையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்திருந்தார்கள். அதுவும் பொங்கல் தினத்தில் இருவரும் உடற்பயிற்சி செய்யும் வீடியோவைப் பகிர்ந்து, " தை பிறந்தால் வழி பிறக்கும். உடற்பயிற்சி செய்தால், உடம்பு சிறக்கும்." "இப்படிக்கு, புயலும் புயலும்." இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்" என்று பகிர்ந்திருந்ந்தார்கள். இந்த வீடியோவில் என்ன கூத்து என்றால், நடனப்புயல் பிரபு தேவா செய்யும் உடற்பயிற்சியை செய்ய வைகைப்புயல் வடிவேலு திணறுகிறார். அவரது ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் என்னங்க ஐயா சொல்றீங்க... ஒன்னுமே புரியல என்பது போல சொதப்பிக் கொண்டு இருந்தார். ஒரு வழியாக அதைச் செய்தும் முடித்தார்.

காதலர் தின வாழ்த்து: இப்படி இருக்கையில் காதலர் தினமான இன்று அதாவது பிப்ரவரி 14ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வடிவேலுவுடன் தான் ஜாலியாக நடந்து செல்லும் வீடியோவைப் பகிர்ந்து காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரபு தேவா. அதாவது, பிரபு தேவாவும் வடிவேலும் நடந்து செல்கிறார்கள். அப்போது வடிவேலுவை நோக்கி, நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை என்ற பாடலைப் பாடச் சொல்கிறார். உடனே வடிவேலும் அந்த பாடலைப் பாடிக் கொண்டே அவருடன் இணைந்து நடந்து செல்கிறார். இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள பிரபு தேவா காதலர் தின வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த பலரும் இது காதலர் தின வாழ்த்து போல தெரியவில்லை, இது சிங்கிள்ஸ்க்கான வாழ்த்து போல உள்ளது என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். பலரும் பதிலுக்கு காதலர் தின வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X