சூப்பர் ஸ்டாருடன் மாஸ் கூட்டணி... போக்கிரி ஸ்டைலில் கம்பேக் கொடுக்கும் பிரபுதேவா

ஹைதராபாத்: டான்ஸர், டான்ஸ் மாஸ்டர் என திரையுலகில் அறிமுகமான பிரபுதேவா ஹீரோ, இயக்குநர் என பல பரிமாணங்களிலும் கலக்கி வருகிறார்.

இறுதியாக பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்த ராதே திரைப்படம் 2021ம் ஆண்டு வெளியானது.

அதன்பின்னர் ஹீரோவாக நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் பிரபுதேவா.

இந்நிலையில், மீண்டும் இயக்குநராக வேண்டும் என முடிவெடுத்துள்ள பிரபுதேவா சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 இந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன்

இந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன்

மெளன ராகம், அக்னி நட்சத்திரம் படங்களில் டான்ஸராக முகம் காட்டிய பிரபுதேவா, படிப்படியாக கோலிவுட்டின் டாப் டான்ஸ் மாஸ்டராக வலம் வந்தார். ஒருகட்டத்தில் பிரபுதேவா கோரியோகிராப் செய்த பாடல்களை ரசிக்கவே தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என கொண்டாடப்பட்ட பிரபுதேவா, இந்து திரைப்படம் மூலம் ஹீரோவாக புதிய அவதாரம் எடுத்தார். தொடர்ந்து காதலன், லவ் பேர்ட்ஸ், மின்சார கனவு, கமலுடன் காதலா காதலா, விஜயகாந்துடன் வானத்தைப்போல, எங்கள் அண்ணா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

 மீண்டும் இயக்குநராக முடிவு

மீண்டும் இயக்குநராக முடிவு

டான்ஸ் மாஸ்டர், ஹீரோ கனவுடன் ஒதுங்கிவிடாமல் டைரக்டராகவும் மாஸ் என்ட்ரி கொடுத்தார். விஜய் நடிப்பில் பிரபுதேவா இயக்கிய போக்கிரி திரைப்படம் மாஸ் ஹிட் கொடுத்தது. இதேபடம் இந்தியில் சல்மான் கான் நடிப்பில் வாண்டட் என்ற டைட்டிலில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த சங்கர் தாதா ஜிந்தாபாத் படத்தை இயக்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் கமர்சியல் டைரக்டராக கொண்டாடப்பட்டார். கடைசியாக இந்தியில் சல்மான் கான் நடித்த ராதே படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் தோல்வியடைந்த நிலையில், தற்போது மீண்டும் இயக்குநர் என்ற முடிவோடு பிரபுதேவா ரெடியாகிவிட்டாராம்.

 சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி

சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி

தமிழில் தேள், மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்தப் படங்கள் எதுவுமே ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனால் இயக்குநராக முடிவெடுத்துள்ள பிரபுதேவா, புதிய படத்தின் ஹீரோவாக தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியை நடிக்க வைக்கவுள்ளாராம். ஏற்கனவே இந்தக் கூட்டணி சங்கர் தாதா ஜிந்தாபாத் படத்தில் மாஸ் காட்டியதால் இந்த அப்டேட் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

கடந்தாண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான காட்ஃபாதர் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இதில் சல்மான் கானும் கேமியோ ரோலில் நடித்திருந்தார். முக்கியமாக இந்தப் படத்தின் ஒரு பாடலை பிரபுதேவா தான் கோரியோகிராபி செய்திருந்தார். அப்போது புதிய படத்தின் கதையை சிரஞ்சீவியிடம் பிரபுதேவா கூறியதாகவும், அதற்கு அவரும் ஓக்கே சொல்லிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் படம் போக்கிரி ஸ்டைலில் ஆக்‌ஷன் ஜானரில் இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விரைவில் பிரபுதேவா - சிரஞ்சீவி படம் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X