விஜய்யை மீண்டும் இயக்க விரும்புகிறேன்! - பிரபு தேவா
இப்போது இந்திப் படங்களில் பிஸியாக இருந்தாலும், அடுத்து விஜய்யை வைத்து தமிழில் இயக்க விரும்புகிறேன், என்று கூறியுள்ளார் இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா.
சென்னையில் நேற்று களவாடிய பொழுதுகள் படத்தின் பத்திரிகையைளர் சந்திப்பு நடந்தது.
இதில் படத்தின் ஹீரோவான பிரபு தேவா, இயக்குநர் தங்கர் பச்சான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எப்போதோ தொடங்கப்பட்ட இந்தப் படம் குறித்து நீண்ட நேரம் பேசினர்.

மறுபடியும் வருவீகளா பிரபு
மும்பையிலேயே பெரும்பாலும் தங்கிவிட்ட பிரபு தேவா மீண்டும் தமிழ் சினிமாவை இயக்குவாரா? என்று கேள்வி எழுப்பினர் நிருபர்கள்.

அதெல்லாம் பெயரலை...
அதற்கு பதிலளித்த பிரபுதேவா கூறுகையில், "நான் மும்பைக்கு குடிபெயர்ந்துவிட்டதாக சொல்லப்படுவதில் உண்மை இல்லை. எனது சினிமா படவேலைகள் மும்பையில் இருப்பதால் அதிக நாட்கள் அங்கு தங்குகிறேன்.

என் வீடு சென்னைதான் பாஸ்
ஆனாலும் சென்னைதான் என் வீடு. என் இரு மகன்கள் சென்னையில் உள்ளனர். இருவரும் அவர்களின் அம்மாவுடன் வசிக்கிறார்கள்.

ஓய்வு கிடைக்கும்போதெல்லாம்
எனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சென்னை வந்து குழந்தைகளைப் பார்க்கிறேன். அவர்களுக்கும் நேரம் கிடைக்கும் போது மும்பை வருகிறார்கள்.

விஜய்யுடன் மறுபடியும் ...
தமிழில் மீண்டும் விஜய்யை வைத்து படம் எடுக்க விருப்பம் உள்ளது. அதற்கான வாய்ப்புகள் அமையும் போது முயற்சியில் இறங்குவேன்," என்றார்.

ஒரு சூப்பர் டூப்பர்.. ஒரு டுபாக்கூர்
விஜய்யை வைத்து போக்கிரி என்ற சூப்பர் ஹிட் படமும், வில்லு என்ற சூப்பர் ப்ளாப் படமும் கொடுத்தவர் பிரபு தேவா. போக்கிரியின் இந்தி ரீமேக்கில் பிரபு தேவாவுக்காக ஒரு நடனமும் ஆடிக் கொடுத்தார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











