»   »  பிரபு தேவா நடிக்கும் புதிய படம்... யங் மங் சங்!

பிரபு தேவா நடிக்கும் புதிய படம்... யங் மங் சங்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேவி படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த பிரபு தேவாவுக்கு அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்புகள் குவிகின்றன. எனவே படம் இயக்குவதை சற்று நிறுத்திவிட்டு, நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.

அடுத்து அவர் ஒப்பந்தமாகியுள்ள படத்துக்கு யங் மங் சங் என்று தலைப்பிட்டுள்ளனர்.

Prabhu Deva in Young Mung Sung

இந்த படத்தில் தங்கர் பச்சான் முக்கிய வேடம் ஏற்கிறார். ஆர்ஜெ பாலாஜி, பாகுபலி பிரபாகர் (கலக்கேயா), சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அம்ரீஷ் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எம்.எஸ்.அர்ஜுன். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.

இந்தப் படத்தை வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் சார்பில் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரிக்கின்றனர். இவர்கள் ஏற்கெனவே ஒரு பக்க கதை, சந்தானம் நாயகனாக நடிக்கும் ஓடி ஓடி உழைக்கனும் படங்களைத் தயாரித்து வருகின்றனர்.

யங் மங் சங் படப்பிடிப்பு இம்மாதம் துவங்க உள்ளது.

English summary
After Devi's success, Prabhu Deva is starring as hero in a movie titled Young Mung Sung.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil