பிரபுதேவாதான் என் சப்போர்ட்.. விட்டுக்கொடுக்கமாட்டேன்.. டைவர்ஸ்லாம் நோ ப்ராப்ளம்.. முதல் மனைவி ஓபன்
சென்னை: பிரபுதேவா முதலில் ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மொத்தம் மூன்று மகன்கள். அவர்களில் மூத்த மகன் உடல்நல குறைவால் உயிரிழந்தார். சூழல் இப்படி இருக்க பிரபுதேவா நடிகை நயன்தாராவை காதலித்தார். இதன் காரணமாக முதல் மனைவி ரமலத்தை பிரிந்தார். நயனை திருமணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்த்த சூழலில் அந்தக் காதலும் பாதியில் முடிந்தது. அதனையடுத்து ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அந்தத் தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். சமீபத்தில்தான் அந்தப் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிரபுதேவாவின் முன்னாள் மனைவி ரமலத் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் மூத்த நடன அமைப்பாளர்களில் ஒருவர் சுந்தரம் மாஸ்டர். அவரது இரண்டாவது மகன் பிரபுதேவா அக்னி நட்சத்திரம் படத்தில் இடம்பெற்ற ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா என்ற பாடலில் க்ரூப் டான்ஸராக தனது திரை பயணத்தை தொடங்கினார். அவருக்கு படிப்பு வராததாலும்; நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததாலும் சுந்தரம் மாஸ்டர் தனது மகனை தன்னுடைய க்ரூப்பில் சேர்த்துக்கொண்டார். அந்தப் பாடலுக்கு பிறகு தொடர்ந்து க்ரூப் டான்ஸராக இருந்த பிரபுதேவா; படங்களில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கும் தோன்றி நடனமாட ஆரம்பித்தார். ஸ்டைல், வேகம், எக்ஸ்பிரஷன் என தனது டான்ஸில் பட்டையை கிளப்பிய அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாக தொடங்கியது.

நடன அமைப்பாளர் பிரபுதேவா: தொடர்ந்து பாடலுக்கு நடனமாடிவந்த அவர்; ஒருகட்டத்தில் நடன அமைப்பாளராக பணியாற்ற தொடங்கினார். அவர் நடன அமைப்பாளராக மாறிய பிறகு ஆட தெரியாத ஹீரோக்களும் மிக சிறப்பாக நடனமாட ஆரம்பித்தார்கள். விஜயகாந்த், ரஜினி என பலரும் பிரபுதேவாவால் ஆட்டுவிக்கப்பட்டார்கள். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அவர் சிறந்த நடன அமைப்பாளராக வலம் வர ஆரம்பித்தார்கள். அவர் நடனம் அமைத்தாலே பெண்டை நிமிர்த்திவிடுவார் என்று பல நடிகர்கள், நடிகைகள் சொல்லியிருக்கிறார்கள். அதேபோல் அவரது க்ரூப்பில் ஆடியவர்கள் எல்லாம் இப்போது கோலிவுட்டின் டாப் நடன அமைப்பாளர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீரோ பிரபுதேவா: நடன அமைப்பாளராக இருந்த அவர் திடீரென ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அதன்படி காதலன், ஏழையின் சிரிப்பில், டைம், பெண்ணின் மனதை தொட்டு, மிஸ்டர் ரோமியோ, வானத்தை போல, தேவி என எக்கச்சக்க படங்களில் நடித்திருக்கிறார். 90களில் பிரபுதேவாவும் ஒரு குறிப்பிடத்தக்க நடிகராக ஜொலித்துக்கொண்டிருந்தார். அவரது நடனத்தில் எப்படி இயல்பும், எதார்த்தமும் இருந்ததோ அதேபோல் அவரது நடிப்பிலும் இருந்தது. அதன் காரணமாகவே அவருக்கென்றும் ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கூட ஜாலியோ ஜிம்கானா என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் அவர். விஜய்யுடன் கோட் படத்திலும் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார் அவர்.

இயக்குநர் அவதாரம்: இதற்கிடையே நடன அமைப்பாளர், நடிகர் என்ற அவதாரங்களை கொண்டிருக்கும் அவருக்கு இன்னொரு அவதாரமும் இருக்கிறது. அதுதான் இயக்குநர் அவதாரம். தெலுங்கில் சித்தார்த், திரிஷாவை வைத்து படம் இயக்கிய அவர் ஹிட் இயக்குநர் என்ற பெயரை பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழில் விஜய்யை வைத்து போக்கிரி படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி கோலிவுட் மார்க்கெட்டிலும் அவருக்கான டிமாண்டை அதிகரித்தது. அந்தப் படத்துக்கு பிறகு தமிழில் அவர் இயக்கிய வில்லு, வெடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களில் வில்லு திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் அவர் ஃபேமஸான இயக்குநர் ஆவார்.
திருமண சர்ச்சைகள்: பிரபுதேவாவின் திருமண வாழ்க்கை சர்ச்சைகள் நிறைந்தது. முதலில் தன்னுடன் க்ரூப் டான்ஸராக இருந்த ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்காக ரமலத் ஹிந்து மதத்துக்கும் மாறினார். பெயரை லதா என்று மாற்றிக்கொண்டார். அவர்களுக்கு மொத்தம் மூன்று மகன்கள். அவர்களில் மூத்த மகன் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்னதாக உடல்நல குறைவால் உயிரிழந்தார். மகன்கள் மீது அதீத பாசம் கொண்டிருக்கும் பிரபுவால் தன்னுடைய மகன் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் ஒருவழியாக மனதை தேற்றிக்கொண்டார். மற்ற இரண்டு மகன்களையும் பத்திரமாக வளர்க்க ஆரம்பித்தார்.
நயனுடன் காதல்: இப்படிப்பட்ட சூழலில் வில்லு படத்தில் பணியாற்றியபோது நடிகை நயன்தாராவுடன் காதல் மலர்ந்தது. அந்தக் காதலுக்காக ரமலத்தை விவாகரத்து செய்தார் அவர். ரமலத்தை பிரிந்த அவர் கண்டிப்பாக நயனை திருமணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தக் காதலும் பாதியில் முடிந்தது. நயனுடனான பிரிவுக்கு பிறகு ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் பிரபுதேவாவின் முன்னாள் மனைவி ரமலத் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார்.
ரமலத்தின் பேட்டி: அவர் அளித்திருந்த அந்தப் பேட்டியில், "பிரபுதேவாவுக்கு எங்கள் பிள்ளைகள் என்றாலே உயிர்தான். அவ்வளவு பாசமாக இருப்பார். அதேபோல் எனது இரண்டு மகன்களும் அப்பா மீதும் மிகப்பெரிய பாசம் வைத்திருக்கிறார்கள். எங்கள் மகன்களை நாங்கள் வாடி போடி என்றுதான் கூப்பிடுவோம். எங்களுக்கு இருந்த மூன்று மகன்களில் மூத்த மகனை இழந்துவிட்டோம். இரண்டாவது மகன் பெயர் ரிஷி ராகவேந்தர் தேவா, கடைசி மகன் பெயர் ஆதித் தேவா. மகன்களுக்கு நான்தான் பெயர் வைத்தேன். அவர்களும் எங்கேயாவது வெளியே போக வேண்டுமென்றால் என்னிடமும், அவர்களது அப்பாவிடமும் பெர்மிஷன் கேட்டு நாங்கள் ஓகே சொன்னால்தான் போவார்கள்.

எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்: பிரபுதேவாவின் கான்செர்ட்டில் ரிஷி ஆடியது அவ்வளவு அருமையாக இருந்தது. அப்பாவின் ப்ளட் ரிஷிக்குள்ளும் இருக்கும்தானே. அவர் நடனம் ஆடியதை பார்த்து எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள். ரிஷியா இப்படி ஆடியது என்று பலரும் கேட்டார்கள். அவர் கடந்த இரண்டு வருடங்களாகத்தான் நடனத்தை கற்றுக்கொண்டார். அவரை ஹீரோவாக நடிக்க வையுங்கள், நடனமாட வையுங்கள் என்று ஏகப்பட்ட சான்ஸ்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவர் முழுமையாக அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறோம். சின்னவரை பொறுத்தவரை அவருக்கு சினிமாவில் ஆர்வம் இல்லை.மருத்துவராக வேண்டும் என்றுதான் ஆசை. வெளிநாட்டுக்கு சென்று படிக்கப்போகிறார்.
பிரபுதேவாதான் என் சப்போர்ட்: எனக்கு பிரபுதேவாவுக்கும் விவாகரத்து ஆகியிருந்தாலும் பிரச்னை எல்லாம் ஒன்றும் இல்லை. அவர்தான் இன்றுவரை எனக்கும், குழந்தைகளுக்கும் சப்போர்ட்டாக இருக்கிறார். என்னைப் பற்றி அவர் எப்போதுமே தவறாக பேசியதில்லை. நானும் அவரை விட்டுக்கொடுத்து பேசமாட்டேன். எதுவாக இருந்தாலும் உடனடியாக என்னிடமும் மகன்களிடமும் பேசிவிடுவார். சிங்கிள் பேரண்ட்டிங் என்பது கஷ்டம்தான். ஆனாலும் அதை சமாளித்துவிட்டேன். பிரபுதேவாவை பொறுத்தவரை அவர் மகன்களுக்கு மிகச்சிறந்த தகப்பனாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். பிறகு ஏன் நான் அவரைப் பற்றி தவறாக பேச வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











