பிரபுதேவா, குழந்தைகளை பார்த்துக்கணும்.. 10 வருடங்கள்.. அதுதான் முக்கியம்.. முதல் மனைவி பளீச்

சென்னை: பிரபுதேவா முதலில் ரமலத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தன்னுடன் நடன க்ரூப்பில் நடனம் ஆடியபோது ரமலத் மீது அவருக்கு காதல் மலர்ந்தது. அந்தக் காதலுக்கு வீட்டு சம்மதம் கிடைத்ததை அடுத்து இரண்டு பேருக்கும் ஜோராக திருமணம் நடந்தது. அவர்களுக்கு மொத்தம் மூன்று மகன்கள் பிறந்தார்கள். அவர்களில் ஒரு மகன் உயிரிழந்துவிட்டார். அந்த உயிரிழப்பு பிரபுதேவா மற்றும் ரமலத் ஆகியோரை பாதித்தது. தொடர்ந்து இரண்டு பேரும் தங்களது காதல் வாழ்க்கையை நல்லபடியாக நகர்த்திய சமயத்தில் பிரபுவுக்கு நயன்தாரா மீது காதல் ஏற்பட்டது. இதன் காரணமாக ரமலத்தை பிரிந்தார். அதனையடுத்து நயனுடன் வாழ்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அந்த உறவிலிருந்தும் வெளியே வந்தார் அவர். தொடர்ந்து ஹிமானி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் பிரபுதேவாவின் முதல் மனைவி கொடுத்திருக்கும் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் மூத்த நடன இயக்குநர்களில் ஒருவரான சுந்தரம் மாஸ்டருக்கு மொத்தம் மூன்று மகன்கள். ராஜு சுந்தரம், பிரபுதேவா, நாகேந்திர பிரசாத் ஆகிய மூன்று பேருமே திரைத்துறையில்தான் இருக்கிறார்கள். அவர்களில் நாகேந்திர பிரசாத் மட்டும் பெரிதாக வளரவில்லை. ஆனால் மூத்தவரான ராஜு சுந்தரம், அடுத்தவரான பிரபுதேவா ஆகிய இரண்டு பேரும் நடனம் மற்றும் இயக்கத்தில் கால் பதித்தார்கள். முக்கியமாக பிரபுதேவா ஹீரோவாகவும் கலக்கினார். அதேபோல் ராஜு சுந்தரமும் உன்னாலே உன்னாலே, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவரும் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியவர்தான் என்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும் நடிப்பில் பிரபுதேவா போல் அவரால் மிளிர முடியவில்லை.

Prabhu Deva s Ex wife Ramlath has said that she wants to take care of him

செம புகழடைந்த பிரபுதேவா: ராஜு சுந்தரமும் தமிழ் சினிமாவில் பெரிய நடன அமைப்பாளர்தான். ஆனாலும் பிரபுதேவா அளவுக்கு அவரால் இந்திய அளவில் புகழடைய முடியவில்லை. ஆனால் பிரபுதேவாவோ இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்படுபவர். அவரது நடன அசைவுகளை கண்கொட்டாமல் பார்க்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதேபோல் இந்திய சினிமாவில் எந்த மொழியை சேர்ந்த ஹீரோவாக இருந்தாலும் பிரபுதேவா மீதும், அவரது நடனத்தின் மீதும் மிகப்பெரிய மரியாதையை வைத்திருப்பவர்கள். அந்த அளவுக்கு அவர் தனது நடனத்தால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோவாகவும் கலக்கிய பிரபுதேவா: நடனத்தில் கலக்கிக்கொண்டிருந்த பிரபுதேவா முதன்முதலாக இந்து திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் காதலன் திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. மேலும் பிரபுதேவாவின் நடிப்புக்கும் தனி ரசிகர் பட்டாளம் சேர ஆரம்பித்தது.அதுமட்டுமின்றி படு எதார்த்தமாக நடிக்கிறாரே என்றும் ரசிகர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். அதனையடுத்து அவர் மின்சார கனவு, டைம், பெண்ணின் மனதை தொட்டு, ஏழையின் சிரிப்பில், வானத்தை போல, என ஏராளமான படங்களில் நடித்து பட்டையை கிளப்பினார். இதன் காரணமாக 90களிலும்2000களின் ஆரம்பத்திலும் பிரபுதேவாவும் தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக கோலிவுட்டில் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

திருமண சர்ச்சைகள்: நடிப்பில் கலக்கிக்கொண்டிருந்த பிரபுதேவா இயக்கத்திலும் தனது கவனத்தை திருப்பினார். அதன்படி தெலுங்கில் சித்தார்த், திரிஷா உள்ளிட்டோரை வைத்து தனது முதல் படத்தை இயக்கினார். அந்தப் படம் டோலிவுட்டில் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. அந்த ஹிட்டுக்கு பிறகு தமிழில் விஜய்யை வைத்து போக்கிரி படத்தை இயக்கினார். அப்படமும் மெகா ஹிட்டடிக்கும் இயக்குநராகவும் ஜொலிக்க ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து தமிழில் வில்லு, வெடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் ஹிந்தியில் வாண்டட், ரவுடி ரத்தோர் உள்ளிட்ட படங்களை இயக்கி இந்திய அளவில் ஃபேமஸான இயக்குநர் என்ற பெயரையும் பெற்றார். இதற்கிடையே அவரது திருமண வாழ்க்கை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருந்தது.

Prabhu Deva s Ex wife Ramlath has said that she wants to take care of him

ரமலத்துடன் திருமணம்: அதாவது முதலில் தன்னுடன் நடன க்ரூப்பில் இணைந்து பணியாற்றிய ரமலத் என்பவரை காதலித்தார். அவர் இஸ்லாமியர் என்பதால் முதலில் பிரபுதேவாவின் குடும்பத்தில் இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பு எழுந்தது. அதனையடுத்து பிரபுதேவாவுக்காக ரமலத் இஸ்லாமிய மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்கு மாறி லதா என்று பெயரை மாற்றிக்கொண்டார். அவர்களது திருமணத்தை அடுத்து அவர்களுக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒரு மகன் உடல்நல குறைவால் உயிரிழந்தார். சூழல் இப்படி இருக்க வில்லு படத்தில் பணியாற்றியபோது நயனுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதால் ரமலத்தை பிரிந்துவிட்டார் பிரபுதேவா. அது அந்த சமயத்தில் ஒட்டுமொத்த கோலிவுட்டிலும் பேசுபொருளாக மாறியிருந்தது.

இரண்டாவது திருமணம்: அதனைத் தொடர்ந்து நயனுடன் லிவிங் டூ கெதரில் இருந்தார். நயனும் பிரபுதேவாவுக்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்கு மாறி சினிமாவிலிருந்தும் ஒதுங்கினார். கண்டிப்பாக பிரபுதேவா - நயன்தாரா திருமணம் நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த சூழலில்; அவர்கள் பிரிந்துவிட்டார்கள். அவர்களது பிரிவுக்கு பல பேர் பல காரணங்களை யூகங்களாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் நயனை திருமணத்துக்கு பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கும்படி பிரபுதேவா கட்டாயப்படுத்தியதுதான் முக்கிய காரணம் என்பது பெரும்பாலானோரின் கருத்து. நயனை பிரிந்த அவர்; அடுத்ததாக ஹிமானி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

ரமலத் பேட்டி: இந்நிலையில் பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "நான் எட்டு வயதிலிருந்து நடனம் ஆட கற்றுக்கொண்டேன். ஆனால் நான் முறையாக கிளாஸுக்கு சென்று நடனம் கற்றுக்கொண்டதில்லை. வீட்டில் டேப் ரெக்கார்டரில் பாடல் கேசட்டை போட்டு; அதை கேட்டு கேட்டு ஆடி ஆடிதான் நடனத்தை நான் முதன்முறையாக கற்றுக்கொண்டேன். நானும் எனது அண்ணனும் ஆடிக்கொண்டே இருப்போம். ஒரே ஒரு நாள்மட்டும்தான் கிளாசிக் டான்ஸ் கற்றுக்கொள்வதற்காக கிளாஸ் சென்றேன். ஆனால் எனது கால் அப்போது முறிந்துவிட்டதால் அந்த வகுப்புக்கும் நான் தொடர்ந்து செல்லவில்லை.

Prabhu Deva s Ex wife Ramlath has said that she wants to take care of him

அப்பாவும், அண்ணனும் சினிமாதான்: எனது பூர்வீகம் கேரளா. ஆனால் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். என்னுடைய அப்பா சினிமாவில் ஃபைட் மாஸ்டராக இருந்தார். என்னுடைய அண்ணனும் சினிமாவில் ஃபைட்டராக இருந்திருக்கிறார். அவர்கள் சினிமாவில்தான் இருக்கிறார்கள் என்பது நான் சின்ன வயதாக இருக்கும்போது எனக்கு தெரியவே தெரியாது. ஏதோ ஒரு வகையில் என்னையும் சினிமா அதற்குள் இழுத்துவிட்டது. நான் மொத்தம் பத்து வருடங்கள் க்ரூப் டான்ஸராக இருந்திருக்கிறேன். தமிழில் கொஞ்சம்தான் பணியாற்றியிருந்தாலும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நிறைய பணியாற்றியிருக்கிறேன். ரஜினிகாந்த்த்தையும், சிவாஜியையும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.மொத்தம் பத்து வருடங்கள் நான் சினிமாவில் டான்ஸராக இருந்திருக்கிறேன். ஆனால் திருமணத்துக்கு பிறகு அதை நிறுத்திவிட்டேன். அதை திடீரென நிறுத்தியதும் எனக்கு பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. என்னுடைய கணவரையும், குழந்தைகளையும் பார்த்துக்கொள்வதுதான் முக்கியம் என்று தோன்றியது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X