அவரை விட்டு நகரமாட்டேன்.. பிரபுதேவா முதல் மனைவி ஓபன் டாக்.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க

சென்னை: நடன அமைப்பாளர், நடிகர், இயக்குநர் என பல முகங்களை கொண்டிருப்பவர் பிரபுதேவா. இவர் முதலில் ரமலத் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒருவர் உடல்நல குறைவால் உயிரிழந்துவிட்டார். ரமலத்தை பிரிந்த பிரபுதேவா அடுத்ததாக நயன்தாராவை காதலித்தார். அதுவும் பிரேக் அப்பில் முடிய இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இந்திய சினிமாவின் டான்ஸ் மாஸ்டர்களில் பிரபுதேவா ஒரு லெஜெண்ட். தனது தந்தை நடனம் அமைக்கும்போது அவரது க்ரூப்பில் டான்ஸராக தன்னுடைய நடன பயணத்தை ஆரம்பித்த அவர் அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் ஆனார். கோரியோகிராஃபராக சிறந்தவர் என்று பல முறை பல பாடல்களில் நிரூபித்திருக்கிறார் அவர். அவரது நடன அமைப்பில் எந்த ஹீரோவும், ஹீரோயினும் ஆடினாலும் அவர்களிடமிருந்து பெஸ்ட்டை வாங்காமல் விடமாட்டார் பிரபு.

ஹீரோவாக கலக்கிய பிரபுதேவா: டான்ஸ் கோரியோகிராஃபராக கலக்கிவந்த அவர் இந்து திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். பவித்ரன் இயக்கியிருந்த அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பவித்ரனிடம் உதவி இயக்குநராக இருந்த ஷங்கரின் இயக்கத்தில் காதலன் திரைப்படத்தில் நடித்தார் பிரபுதேவா. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. மேலும் பிரபுதேவாவுக்கும் மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. அப்போதிருந்து அவர் 90களிலும் 2000களின் ஆரம்பத்திலும் குறிப்பிடத்தக்க ஹீரோக்களில் ஒருவராக கலக்க ஆரம்பித்தார். காதல் கொண்டேன், ஆட்டோகிராஃப் ஆகிய படங்களில் எல்லாம் பிரபுதேவாதான் முதலில் நடிப்பதாக இருந்தார்.

எதார்த்த நடிகர்: பிரபுதேவாவின் நடிப்பில் மிகப்பெரிய ப்ளஸ்ஸாக இருப்பது அவரது எதார்த்தம்தான். நடனத்தில் எப்படி எதார்த்தமான முக் பாவனைகளை கொண்டுவருவாரோ அதைவிடவும் பன்மடங்கு எதார்த்தத்தை தன்னுடைய நடிப்பிலும் கொண்டு வந்தார். அதுமட்டுமின்றி பக்கத்து வீட்டு பையன் போன்ற உணர்வும் அவரை பார்க்கும்போது வந்ததால் அவருக்கென்று ரசிகர்கள் தனியாகவே இருந்தார்கள். அவருக்கு வரிசையாக ஹிட் படங்களை கொடுத்த நடிகர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடைசியாக ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தில் நடித்திருந்தார்.படம் தோல்வியை சந்தித்தது.

Prabhu Deva s Ex wife Ramlath Talks about Her Personal Life
Photo Credit:

திருமணங்கள்: இதற்கிடையே இயக்குநராகவும் வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். விஜய்யின் கரியரிலேயே அவருக்கு அமைந்த மெகா ஹிட் படங்களில் பிரபுதேவா இயக்கிய போக்கிரி திரைப்படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க முதலில் ரமலத் என்பவரை திருமணம் செய்தார்.

இரண்டாவது திருமணம்: 10 வருடங்களுக்கும் மேலாக நல்லபடியாக வாழ்ந்துவந்த அவர்கள் திடீரென பிரிந்தார்கள். அந்த பிரிவுக்கு நயனுடன் பிரபுதேவாவுக்கு ஏற்பட்ட காதல் என்று கருதப்படுகிறது. ஆனால் நயனுடனான காதலும் திருமணத்தில் முடியவில்லை. இப்போது இன்னொருவரை திருமணம் செய்திருக்கிறார். இந்நிலையில் முதல் மனைவி ரமலத் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

ரமலத் பேட்டி: அந்தப் பேட்டியில் அவர், "நானும் பிரபுதேவாவும் பிரிந்தபோது குழந்தைகள் என்னுடன் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். பிள்ளைகள் என்னுடன் இருந்தாலும் அவர்கள் மீது பிரபுதேவாவுக்கு தனி பாசம். எதை கேட்டாலும் வாங்கி கொடுத்துவிடுவார். நாங்கள் ஐந்து பிள்ளைகளுக்கு பிளான் செய்திருந்தோம். ஆனால் எனக்கு சிசேரியன் என்பதால் மூன்றுதான் முடிந்தது.

ஒழுங்காக வளர்க்க முடியாது: பிரபுதேவாவை பிரிந்ததை நினைத்து அழுதுகொண்டிருந்தால் நான் எனது இரண்டு பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்க முடியாது. பிரபுதேவாவை பிரிந்த நேரம் ரொம்பவே போராட்டத்தை சந்தித்தேன். நான் அவருடன் இருந்தபோது அவரை விட்டு எங்கேயும் நகரமாட்டேன். அவருடன் மட்டும்தான் இருப்பேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X