விஷால், கார்த்தியை வைத்து பிரபுதேவா இயக்கவிருந்த படம்.. ட்ரெண்டாகும் போஸ்டர்.. ஏன் ட்ராப் தெரியுமா?

சென்னை: பிரபுதேவா இந்தியாவில் புகழ் பெற்ற நடன அமைப்பாளர்களில் ஒருவர். அதுமட்டுமின்றி பல படங்களில் ஹீரோவாக நடித்து அப்ளாஸை அள்ளிய அவர் வெற்றிகரமான இயக்குநர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். அவர் தமிழில் இயக்கிய போக்கிரி திரைப்படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. தற்போது விஜய்யுடன் GOAT படத்தில் நடித்துவருகிறார் பிரபுதேவா. இந்தச் சூழலில் விஷால், கார்த்தி ஆகியோரை வைத்து பிரபுதேவா கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்ற படத்தை இயக்குவதாக இருந்தார்.

இந்தியாவின் சிறந்த நடன அமைப்பாளர் பிரபுதேவாவின் கோரியோகிராஃபியயில் அனைத்து நடிகர்களுமே சிறப்பான நடனத்தை வெளிப்படுத்துவார்கள். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைத்தார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மீனா; இருப்பதிலேயே ரொம்பவும் கடினமான கோரியகிராஃபர் என்றால் அது பிரபுதேவாதான் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. நடன அமைப்பாளராக மட்டுமின்றி பிரபுதேவா நடிகராகவும் புகழ் பெற்றவர். காதலன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரபுதேவா தொடர்ந்து ராசைய்யா, விஐபி, மின்சாரக்கனவு, டைம் என ஏராளமான படங்கள் நடித்தார்.

Prabhu Deva Karthi Vishal

காதல் கொண்டேன்: அந்தப் படங்களும் ஹிட்டாகின. இதனால் 90களில் முன்னணி நடிகர்கள் வரிசையில் பிரபுதேவா இருந்தார். மேலும் காதல் கொண்டேன் படத்துக்கு ஹீரோவாக நடிக்க முதலில் செல்வராகவன் பிரபுதேவாவைத்தான் அணுகினார் என்பது நினைவுக்கூரத்தக்கது. பிரபுதேவா கடைசியாக பகீரா படத்தில் நடித்திருந்தார். படம் படுதோல்வியை சந்தித்தது.

டைரக்டர் பிரபுதேவா: நடிகர், நடன அமைப்பாளராக கலக்கிவந்த பிரபுதேவா 2005ஆம் ஆண்டு இயக்குநராகவும் அறிமுகமானார். அவர் தெலுங்கில் இயக்கிய முதல் படம்தான் தமிழில் சம்திங் சம்திங் படமாக ரீமேக்காகியது. அதனையடுத்து தமிழில் போக்கிரி, வில்லு, வெடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் ஹிந்தியில் வாண்டட் (போக்கிரி ரீமேக்), ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா, தபாங் 3 உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

Prabhu Deva Karthi Vishal

சர்ச்சைகள்: பிரபுதேவாவை சுற்றி சர்ச்சைகளும் வட்டமடித்தன. தன்னுடன் நடனம் ஆடிய ரமலத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதற்கிடையே நயன்தாராவை காதலித்தார். பிரபுதேவாவுக்காக நயன் மதம் மாறவும் செய்தார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை இருவரின் காதலும் பிரேக் அப்பில் முடிந்தது. இதனையடுத்து அவர் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் பெண் குழந்தை பிறந்தாள்.

Moon Walk: பிரபுதேவா இப்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதன்படி வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் விஜய்யுடன் நடித்துவரும் அவர், அடுத்ததாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மூன் வாக் என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் நடனம் சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்பது போஸ்டரை பார்க்கையில் தெரிகிறது. வேறு சில படங்களிலும் அவர் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கின்றன.

கருப்பு ராஜா வெள்ளை ராஜா: இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் விஷாலையும், கார்த்தியையும் வைத்து கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்ற படத்தை பிரபுதேவா இயக்குவதாக இருந்தது. ஹீரோயினாக ஆர்யாவின் மனைவி சாயிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் அந்தப் படம் ட்ராப் செய்யப்பட்டது. அதற்கு இரண்டு நடிகர்களின் தேதிகள் ஒத்துவராததும், சில பொருளாதார பிரச்னைகளும் காரணமாக சொல்லப்படுகின்றன. இந்தச் சூழலில் அந்தப் படத்தின் போஸ்டர் ஒன்று திடீரென சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X