Prabhu Khushbu: “இளமை திரும்புதே..” பிரபுவுடன் க்யூட்டாக போஸ் கொடுத்த குஷ்பூ... இன்னும் மாறவே இல்ல!

சென்னை: தமிழில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்த பிரபுவும் குஷ்பூவும் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர். தர்மத்தின் தலைவன் படத்தில் இருந்து தொடங்கிய பிரபு, குஷ்பூ இருவரின் நட்பு இப்போது வரையும் தொடர்கிறது. இந்நிலையில் பிரபுவும் குஷ்பூவும் சந்தித்துக்கொண்ட போட்டோ திடீரென டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

பிரபுவுடன் போஸ் கொடுத்த குஷ்பூ
1980, 90களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் இளைய திலகம் பிரபு. மறைந்த நடிகர் சிவாஜியின் மகனான பிரபு, ஹீரோவாக நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போது இளம் ஹீரோக்களின் படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருகிறார். 90களில் பிரபு கொடி கட்டி பறந்து கொண்டிருந்த நேரத்தில் அவரது படங்கள் குறித்து செய்திகள் வெளியானால், ஜோடி யார் குஷ்பூவா என ரசிகர்கள் பார்ப்பது வழக்கம்.

 Prabhu Khushbu: Prabhu and Kushboo photos together are trending now

அந்தளவிற்கு தமிழ் சினிமாவில் பிரபு - குஷ்பூ காம்போ செய்த மேஜிக் ஏராளம். தமிழில் தர்மத்தின் தலைவன் படம் மூலம் அறிமுகமானார் குஷ்பூ. சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் குஷ்பூ பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்தார். ஆனாலும் பிரபுவும் குஷ்பூவும் இணைந்து நடித்த படங்களின் எண்ணிக்கை அதிகம்.

மை டியர் மார்த்தாண்டன், சின்ன தம்பி, கிழக்கு கரை, மறவன், தர்ம சீலன், சின்ன வாத்தியார் என பல படங்களில் பிரபுவுடன் நடித்துள்ளார் குஷ்பூ. இவர்களது கெமிஸ்ட்ரியில் சின்ன தம்பி திரைப்படம் சில்வர் ஜூப்ளி வெற்றியை கொண்டாடியது. அப்போது இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. அதுமட்டும் இல்லாமல் பிரபுவை குஷ்பூ திருமணம் செய்துகொள்ள போவதாகவும் சொல்லப்பட்டன.

 Prabhu Khushbu: Prabhu and Kushboo photos together are trending now

ஆனால் இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதோடு, பிரபுவும் குஷ்பூவும் தொடர்ந்து நண்பர்களாகவே பழகி வருகின்றனர். இந்நிலையில் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் டிவிட்டரில் வைரலாகி வருகிறது. குஷ்பூ சினிமாவில் அறிமுகமான போது பிரபுவுடன் எடுத்துக்கொண்ட போட்டோவும், சமீபத்தில் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படமும் ஒன்றாக வைரலாகிறது.

இந்த இரண்டு புகைப்படங்களிலும் பிரபுவும் குஷ்பூவும் க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் 'இளமை திரும்புதே' என்ற பாடல் வரிகளுடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். விஜய்யின் வாரிசு படத்தில் குஷ்பூவும் நடித்திருந்தார். ஆனால், அந்த காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை. அதேநேரம் பிரபுவின் காட்சிகள் மட்டும் படத்தில் இருந்தன. பிரபுவும் குஷ்பூவும் கடைசியாக வாரிசு படத்தில் தான் இணைந்து நடித்திருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட போட்டோ தான் இது எனவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X