நடிகர்கள் பிரபு, ராமராஜன் காயம்!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இடி மற்றும் சூறாவளியுடன் பெரும் மழை பெய்தது. அப்போது நடிகர்கள் தியாகராஜன், பிரபு மற்றும் ராமராஜன் ஆகியோர் தங்கள் கார்களில் சென்னையிலிருந்து உடுமலைப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அந்தியூரை அடுத்த சின்னத்தம்பி பாளையம் கிராமத்தையொட்டி அவர்கள் கார் வந்தபோது பலத்த மழை மற்றும் காற்றில் புளிய மரத்தின் பெரிய கிளை ஒன்று முறிந்து கார் மீது விழுந்தது.
இதில் பிரபு மற்றும் ராமராஜனுக்கு காயங்கள் ஏற்பட்டன. அந்தியூர் போலீஸார் அவர்களை மீட்டனர். தியாகராஜன் மட்டும் காயமின்றித் தப்பினார்.
Comments


Click it and Unblock the Notifications