»   »  "கும்கி 2". தன் மகனை ஹீரோவாக்கி அழகு பார்க்கும் பிரபு சாலமன் Exclusive

"கும்கி 2". தன் மகனை ஹீரோவாக்கி அழகு பார்க்கும் பிரபு சாலமன் Exclusive

Posted By:
Subscribe to Oneindia Tamil
'கும்கி 2'. தன் மகனை ஹீரோவாக்கி அழகு பார்க்கும் பிரபு சாலமன்- வீடியோ

சென்னை: கும்கி 2 படத்தில் தனது மகனையே ஹீரோவாக்குகிறார் இயக்குநர் பிரபு சாலமன்.

கண்ணோடு காண்பதெல்லாம் படம் மூலம் தமிழில் இயக்குநரானவர் பிரபு சாலமன். விக்ரமை வைத்து கிங் படம் எடுத்தாலும் கூட மைனா என்ற சின்ன படம் தான் இவரை பெரிதாக அடையாளம் காட்டியது.

 Prabhu Saomon to become hero

மைனாவுக்கு பிறகு புதுமுகங்கள் விக்ரம் பிரபு, லட்சுமி மேனனை வைத்து கும்கி என்னும் சூப்பர் ஹிட் தந்தார். ஆனால் பிரபு சாலமன் கேரியரில் சின்ன சறுக்கல் விழுந்துவிட்டது. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான தொடரி படுதோல்வி அடைந்தது. எனவே இழந்ததை மீட்க கும்கி 2 எடுக்க திட்டமிட்டிருக்கிறார்.

கும்கி 2 படத்தில் லிங்குசாமி அண்ணன் மகன் மதிவாணனையும், அதிதி மேனனையும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் இப்போது என்ன மாற்றமோ பிரபு சாலமனின் மகன் சஞ்சய் சாலமனையே ஹீரோவாக்கும் முடிவுக்கு வந்திருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.

 Prabhu Saomon to become hero

பிரபு சாலமனின் மகன் ஆக்சிஜன் உள்ளிட்ட சில குறும்படங்களில் நடித்தவர். சினிமாவில் நடிப்பதற்கான பயிற்சிகளையும் எடுத்து வருகிறார். எனவே வீட்டிலேயே ஹீரோவை வைத்துக்கொண்டு வெளியில் ஏன் தேட வேண்டும்? என்று முடிவெடுத்து விட்டார் போல...!

English summary
Director prabhu salomon has planned to introduce his son Sanjay Salomon in his next venture Kumki 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil