பிரபு சாலமன் இயக்கத்தில் அஸ்வின்... ட்ரைபல் சப்ஜெக்ட்டாம்... சூட்டிங் முடிஞ்சாச்சு
சென்னை : பிரபு சாலமன் கும்கி உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர்.
இவர் தற்போது கும்கி 2 படத்தை இயக்கி வருகிறார்.
இதனிடையே நடிகர் அஸ்வின் நடித்துள்ள படத்தின் சூட்டிங்கையும் பிரபு சாலமன் இயக்கி முடித்துள்ளார்.

இயக்குர் பிரபு சாலமன்
மைனா, கும்கி போன்ற படங்களை இயக்கி இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநர் பிரபு சாலமன். இவரது படங்கள் பெரும்பாலும் காடு சார்ந்த பகுதிகளில் படமாக்கப்பட்டு, கண்ணுக்கும் கருத்துக்கும் இதமான பின்னணியில் படமாக்கப்படும்.

கும்கி 2 படம்
இவர் தற்போது கும்கி 2 படத்தை இயக்கி வருகிறார். கும்கி முதல் பாகத்தில் விக்ரம் பிரபுவிற்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்திருந்தார் பிரபு சாலமன். பழங்குடியின பெண்ணுக்கு ஏற்படும் காதலை வித்தியாசமான வகையில் இந்தப் படத்தில் காட்சிப் படுத்தியிருந்தார்.

சிறப்பான கும்கி படம்
இந்தப் படம் சிறப்பான திரைக்கதை உள்ளிட்டவற்றால் மிகுந்த வெற்றி பெற்றது. படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. படத்தில் லஷ்மி மேனனுக்கு நல்ல பெயர் கிடைத்தது. அவர் அடுத்தடுத்து சிறப்பான படங்களில் நடிக்கும் வாய்ப்பை இந்தப் படம் ஏற்படுத்திக் கொடுத்தது.

அஸ்வின் நடிப்பில் படம்
இந்நிலையில் தற்போது அவர் கும்கி 2 படத்துடன் சேர்த்து நடிகர் அஸ்வினை வைத்து ஒரு படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் மதுரை உள்ளிட்ட இடங்களில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது.

சூட்டிங் நிறைவு
பழங்குடியினரை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் தம்பி ராமைய்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய பிரபு சாலமன் திட்டமிட்டுள்ளார்.

பிரபு சாலமன் இயக்கத்தில் அஸ்வின்
நடிகர் அஸ்வின் நடிப்பில் சமீபத்தில் வெளியான என்ன சொல்லப் போகிறாய் படம் அவருக்கு ஓரளவிற்கு கைக்கொடுத்துள்ளது. தொடர்ந்து அவர் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். இந்நிலையில், சிறப்பான படங்களை கொடுத்துவரும் பிரபு சாலமனின் இயக்கத்தில் அஸ்வின் நடித்து முடித்துள்ளார்.

அஸ்வினுக்கு கைகொடுக்குமா?
விக்ரம் பிரபுவிற்கு சிறப்பான கேரியரை ஏற்படுத்திக் கொடுத்தவர் பிரபு சாலமன். அதேபோல இந்தப் படம் அஸ்வினுக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். பிரபு சாலமனுக்கும் கடந்த சில படங்கள் கைகொடுக்காத நிலையில், அவரும் வெற்றியை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

அடுத்தடுத்த அப்டேட்கள்
படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவற்றை வெளியிடவும், முன்னதாக படத்தின் டைட்டிலை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











