»   »  பிரபு சாலமன் இயக்கம் இந்திப் படம்!

பிரபு சாலமன் இயக்கம் இந்திப் படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கும்கி படத்திற்கு அப்புறம் 'கயல்' படத்தை இயக்கியிருந்தார் பிரபு சாலமன். அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை! அதனால், ஏற்கனவே வெற்றி பெற்ற கும்கி படத்தின் பார்ட் டூ ஆரம்பித்தார். கும்கியில் யானை வரும் காட்சிகளை கம்ப்யூட்டர் கிராஃபிக்சில் பண்ணினது, பல இடங்களில் பொம்மையாக தெரிந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?!

அதனால் இந்தமுறை தாய்லாந்துக்குப் போய் ஒரிஜினல் யானைகளை வைத்து படமாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் முதலில் பிரபு சாலமன் தனது மகனை ஹீரோவாக அறிமுகப் படுத்தப்போகிறார் என்று செய்தி உலாவியது. இப்போது இயக்குநர் லிங்குசாமியின் அண்ணன் மருமகன் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

Prabhu Solomon to direct Hindi movie

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பிரபு சாலமனுக்கு ஒரு இந்திப்பட வாய்ப்பு வந்திருக்கிறது. இந்தி வாய்ப்பை மிஸ் பண்ண முடியுமா? ஸோ, கும்கிக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு இந்திக்குப் போய்விட்டார் இயக்குநர். ஒரு காலத்தில் ராம நாராயணன் இயக்கத்தில் வெளியான 'ஆடிவெள்ளி' மாதிரியான பக்திக் கதையாம்.

English summary
Prabhu Solomon is going to direct a Hindi movie soon

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil