பிரபு சாலமனின் புதிய படம் கயல்!

By Shankar

கும்கி படத்துக்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்துக்கு கயல் என்று தலைப்பிட்டுள்ளனர்.

இந்தப் படத்தை பிரபு சாலமனின் காட் பிக்சர்ஸும், எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

கிங்

கிங்

கிங் படம் மூலம் இயக்குநரானவர் பிரபு சாலமன். விக்ரம் நடித்த அந்தப் படம் சரியாகப் போகவில்லை. அடுத்து கரணை வைத்து கொக்கி படம் எடுத்தார். அந்தப் படம் அவருக்கு வசூல் ரீதியாக வெற்றியைத் தந்தது.

சத்யராஜ் மகன் சிபிராஜை வைத்து லீ என்ற படத்தையும், பின்னர் சார்மி நடித்த லாடம் என்ற படத்தையும் இயக்கினார்.

மைனா

மைனா

ஆனால் இத்தனைப் படங்களில் கிடைக்காத வெற்றி மைனா படம் மூலம் கிடைத்தது. மிகப் பெரிய வசூலைக் கொடுத்த இந்தப் படத்தின் மூலம் பெரிய நாயகியாக உயர்ந்தார் அதில் நடித்த அமலா பால். நட்சத்திர இயக்குநரானார் பிரபு சாலமன்.

கும்கி

கும்கி

அடுத்து அவர் இயக்கிய கும்கியில் கதை சுமார் என்றாலும், அழகிய காட்சிகள், ஒளிப்பதிவு, இசை, லட்சுமி மேனன் நடிப்பு என பல ப்ளஸ்கள் இருந்ததால் நல்ல வெற்றியைப் பெற்றது. விருதுகளைக் குவித்தது.

கயல்

கயல்

கும்கிக்குப் பிறகு புதிய படத்தை அறிவிக்காமல் காத்திருந்தார் பிரபு சாலமன். சிலர் அவரது அடுத்த படம் சுனாமி என்று கூறி வந்தனர். இந்த நிலையில் தன் புதிய படத்தின் பெயர் கயல் என்று அறிவித்துள்ளார் பிரபு சாலமன். இதன் முதல் தோற்ற ஸ்டில்களை இன்று செய்தியாளர் சந்திப்பில் வெளியிடுகிறார். இந்தப் படத்துக்கு டி இமான் இசையமைக்கிறார்.

சொந்தத் தயாரிப்பு

சொந்தத் தயாரிப்பு

இந்தப் படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் பிரபு சாலமன். இதற்கு முன் ஷாலோம் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் நண்பருடன் இணைந்து மைனா, சாட்டை படங்களைத் தயாரித்திருந்தார். இப்போது தனது நிறுவனத்துக்கு காட் பிக்சர்ஸ் என்று பெயரிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X